Last Updated : 11 Apr, 2018 10:30 AM

 

Published : 11 Apr 2018 10:30 AM
Last Updated : 11 Apr 2018 10:30 AM

உங்கள் பெற்றோர் சுத்தம் இல்லாத வேலை செய்கிறார்களா? - மாணவர்களுக்கு பள்ளிகள் அதிர்ச்சி கேள்வி

ஹரியாணாவில், உங்கள் பெற்றோர் சுத்தம் இல்லாத வேலை செய்கிறார்களா? என கேள்வி கேட்டு பெற்றோர் பூர்த்தி செய்வதற்காக பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணா மாநிலத்தில் மாணவர்களின் குடும்ப பின்னணி மற்றும் பெற்றோர்கள் குறித்த விவரங்களை சேகரிக்குமாறு பள்ளிகளுக்கு அம்மாநில கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியது. அதன்படி பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு பல்வேறு கேள்விகள் அடங்கிய விண்ணபத்தை வழங்கியுள்ளன. அதில் மாணவர்களின் ஜாதி, மதம், பெற்றோர் வேலை, பொருளாதார நிலை, ஆதார் எண் என பல்வேறு கேள்விகள் இடம் பெற்றுள்ளன.

அதேசமயம் சில தனியார் பள்ளிகள் அனுப்பிய விண்ணப்பங்களில் ‘‘உங்கள் பெற்றோர் சுத்தம் இல்லாத வேலை செய்கிறார்களா?’’ என கேள்வி இடம் பெற்றுள்ளது. இந்த தகவல் வெளியானதும் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து பள்ளிக்கு சென்று விவரங்களை கேட்டனர். பஞ்ச்குலாவில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து அனுப்பட்ட விண்ணப்பத்தில் இந்த கேள்விகள் இருந்ததால் உடனடியாக பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவரம் வெளியானதும் அம்மாநில எதிர்கட்சிகளும் ஹரியாணா அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆனால் இதனை ஹரியாணா மாநில கல்வித்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. பள்ளி மாணவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்குமாறு மட்டுமே பள்ளிகளை அறிவுறுத்தினோம். வேறு எதனையும் நாங்கள கேட்க அறிவுறுத்தவில்லை என விளக்கம் அளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x