Published : 13 May 2024 06:23 PM
Last Updated : 13 May 2024 06:23 PM

“எனது தொகுதி இவிஎம் மையத்தில் 45 நிமிடங்கள் சிசிடிவி கேமரா ஆஃப்” - சுப்ரியா சுலே சந்தேகம்

சுப்ரியா சுலே

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி மக்களவைத் தொகுதியில் இன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த மையத்தில் 45 நிமிடங்கள் சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டதாக தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள மக்களவை தொகுதிதான் பாராமதி. இங்கு தேசியவாத காங்கிரஸ் சார்பில் களம் காண்கிறார் எம்.பி சுப்ரியா சுலே. இந்த தொகுதிக்கு கடந்த 7 ஆம் தேதி வாக்குபதிவு நடந்து முடிந்தது. இதையடுத்து இவிஎம் மெஷின்கள் ஒரு பாதுகாப்பான குடோனில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், சுப்ரியா சுலே தனது தனது எக்ஸ் தளத்தில், “பாரமதி மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு கடந்த 7-ஆம் தேதி நடந்து முடிந்தது. இதையடுத்து இன்று காலை இவிஎம் மெஷின்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் இருந்த சிசிடிவி கேமராக்கள் 45 நிமிடங்கள் அணைக்கப்பட்டன.

இவிஎம் மெஷின்கள் போன்ற மிக முக்கியமான பொருட்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சிசிடிவி அணைக்கப்பட்டு இருப்பது சந்தேகத்துக்குரியது. இது இது தேர்தல் ஆணையத்தின் மிகப் பெரிய குறைபாடு. தேர்தல் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் நிர்வாகத்தையும் தொடர்பு கொண்டபோது, திருப்திகரமான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை. இது தவிர, தொழில்நுட்ப வல்லுநரும் அந்த இடத்தில் இல்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நிலையை ஆய்வு செய்ய தனது தேர்தல் பிரதிநிதிகளை அனுமதிக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, சரத் பவார் பிரிவினர், “தேர்தல் ஆணையம் இதை உடனடியாக கவனிக்க வேண்டும். சிசிடிவி கேமராக்கள் ஏன் அணைக்கப்பட்டது என்பதற்கான காரணங்களை வெளியிட வேண்டும். இது தவிர, இந்தச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பாராமதி தேர்தல் அதிகாரி கவிதா திவேதி கூறுகையில், “கட்சி அளித்த புகாரை விசாரித்தோம். மேலும் காலை நேரத்தில் வளாகத்தில் சில மின் வேலைகளின்போது கேமராக்களின் கேபிளை குறுகிய காலத்திற்கு அகற்ற வேண்டியிருந்தது. இதனால் குடோனில் உள்ள எலக்ட்ரீஷியன் ஒரு கேபிளை அகற்றியது கண்டறியப்பட்டது” என்று விளக்கமளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x