Published : 27 Apr 2024 08:38 PM
Last Updated : 27 Apr 2024 08:38 PM

“இண்டியா கூட்டணி வென்றால் 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்க திட்டம்” - மோடி பேச்சு

பிரதமர் மோடி

கோலாப்பூர்: ஒருவேளை காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்களை பதவிக்கு கொண்டுவர முயற்சிப்பதாக பிரதமர் மோடி பேசினார்.

மேற்கு மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் நடந்த பேரணியில் பேசிய பிரதமர் மோடி, "எதிர்க்கட்சிகளின் கூட்டணி தேர்தலில் மூன்று இலக்க எண்ணிக்கையை கூட எட்டாது அல்லது ஆட்சியை அமைக்கும் வாய்ப்பை பெறாது. ஆனால், ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றால், ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கொரு பிரதமரை பதவியில் அமர்த்த திட்டமிடுகிறது. கர்நாடகாவில் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் முதல் பதவியை, அம்மாவட்டத்தின் துணை முதல்வருக்கு மாற்றிக் கொடுக்க காங்கிரஸ் கட்சித் திட்டமிட்டுள்ளது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானிலும் இந்த ஏற்பாட்டைதான் செய்திருந்தது.

கர்நாடகாவில் ஒபிசிகளின் 27 சதவீத இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களை இணைத்த மாதிரியை நாடு முழுவதும் விரிவாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சமூக நீதியை கொலை செய்ய சபதமெடுத்துள்ளது. காங்கிரஸ் தனது சமரச மற்றும் வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் மிகவும் தாழ்வாக இறங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி அரசியல் அமைப்பை மாற்ற முயற்சிக்கிறது மற்றும் மத ரீதியிலான இடஒதுக்கீட்டுக்காக தலித்துகள், ஒபிசி இடஒதுக்கிடு பலனைத் திருட முயற்சிக்கிறது.

காங்கிரஸ் கட்சி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டும் இல்லாமல் அதன் கும்பாபிஷேகத்துக்கான அழைப்பையும் நிராகரித்தது. காங்கிரஸின் இளவரசர் உங்களின் சொத்துகளை சோதனை செய்ய விரும்புகிறார். மேலும், அதனை நாட்டின் வளத்தை பெறுவதற்கு முதல் உரிமை உள்ளதாக அக்கட்சி கூறியவர்களுக்கு பகிர்ந்தளிக்க விரும்புகிறார்.

காங்கிரஸ் கட்சி பரம்பரைச் சொத்து வரியை அமல்படுத்த விரும்புகிறது. அதன்மூலம் மக்களின் பரம்பரைச் சொத்தை திருட முயற்சிக்கிறது. அப்படிபட்டவர்கள் அதிகாரத்துக்கு வர சிறுவாய்ப்பு கூட அளிக்கக் கூடாது.

கோலாப்பூர் கால்பந்து விளையாட்டின் மையமாக அறியப்படுகிறது. இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், என்டிஏ கூட்டணி 2 -0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது என்று நான் கூறுவேன். நாட்டுக்கெதிரான கொள்கை, வெறுப்பு அரசியல் காரணமாக இண்டியா கூட்டணி இரண்டு சுய கோல்களைப் போட்டுள்ளன. மூன்றாவது கட்ட வாக்குப்பதிவில் வாக்களார்கள் அத்தகைய கோல்களை அடிப்பார்கள் என்று நான் உறுதியாக இருக்கிறேன். அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுகளிலும் இண்டியா கூட்டணி நிச்சயம் தோல்வியடையும்.

காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் சட்டப்பிரிவு 370 திரும்பக் கொண்டுவரப்படும், பொது சிவில் சட்டம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடியின் முடிவை யாராலும் மாற்ற முடியுமா? அப்படி யாராவது மாற்றினால் அதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று அவர்களுக்கு தெரியுமா?" என்று மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x