Last Updated : 16 Apr, 2018 10:01 AM

 

Published : 16 Apr 2018 10:01 AM
Last Updated : 16 Apr 2018 10:01 AM

கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை: ‘இந்தியா டுடே’ கருத்து கணிப்பில் தகவல்

கர்நாடகாவில் மே 12-ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ஆங்கில செய்தி சேனலான ‘இந்தியா டுடே’ கர்நாடக தேர்தல் குறித்த கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஆளும் காங்கிரஸுக்கு 37 சதவீத வாக்குகளும், பாஜகவுக்கு 35 சதவீத வாக்குகளும், மஜத கூட்டணிக்கு 19 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

இதேபோல 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் 90 முதல் 101 இடங்களையும் பாஜக 78 முதல் 86 இடங்களையும் மஜத, பகுஜன் சமாஜ் கூட்டணி 34 முதல் 43 இடங்களையும் பிடிக்க வாய்ப்புள்ளது. இதனால் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கூறியுள்ளது.

கர்நாடகாவில் லிங்காயத்து தனி மத அறிவிப்பால் பாஜகவுக்கு பாதகம் ஏற்படாது. 39 சதவீத லிங்காயத்து வாக்குகள் எடியூரப்பாவுக்கும், 23 சதவீத லிங்காயத்து வாக்குகள் முதல்வர் சித்தராமையாவுக்கும் கிடைக்கும். தலித்துகளின் வாக்குகள் 41 சதவீதம் சித்தராமையாவுக்கும், 20 சதவீதம் எடியூரப்பாவுக்கும் கிடைக்கும் என்று ‘இந்தியா டுடே’ தனது கருத்து கணிப்புக்கு பிறகு கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x