Published : 15 Apr 2024 11:24 AM
Last Updated : 15 Apr 2024 11:24 AM

கங்கனா ரணாவத்தை எதிர்க்கும் காங்கிரஸின் விக்ரமாதித்ய சிங்!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அதில், அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும், இமாச்சல பிரதேச அமைச்சருமான விக்ரமாதித்ய சிங் மண்டி தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்டி தொகுதியில் பாஜக சார்பில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, மண்டி தொகுதியில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனினும், மண்டி தொகுதி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விக்ரமாதித்யா சிங்கின் கோட்டை என்று கூறப்படுகிறது.

இமாச்சல் வளர்ச்சிக்கு பாஜக வேட்பாளர் கங்கணாவின் பங்கு என்ன; அண்மையில் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது அவர் மக்களை சந்திக்க வராதது ஏன் என்று விக்கிரமாதித்யா கேள்வியெழுப்பி உள்ளார்.

பஞ்சாபில் உள்ள ஆனந்த்பூர் சாஹிப் தொகுதியின் எம்.பி.யான மணீஷ் திவாரி சண்டிகர் தொகுதியிலிருந்து தற்போது போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

மேலும், தற்போதைய எம்எல்ஏவான வினோத் சுல்தான்புரி இமாச்சல பிரதேசத்தின் சிம்லா (தனி) தொகுதியிலிருந்தும், குஜராத்தின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் பரேஷ் தனானி குஜராத்தின் ராஜ்கோட் தொகுதியிலிருந்தும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவுக்கு 9 மக்களவை வேட்பாளர்களையும், குஜராத்துக்கு 4 வேட்பாளர்களையும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x