Last Updated : 02 Feb, 2018 04:07 PM

 

Published : 02 Feb 2018 04:07 PM
Last Updated : 02 Feb 2018 04:07 PM

தனியார் ரயில் தடங்கள்: மத்திய ரயில்வே வாரியம் தீவிர பரிசீலனை

 

சொந்தமாக தண்டாவாளம் அமைத்து, ரயில்கள் இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்க ரயில்வே வாரியம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2018-19ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தாக்கல் செய்தார். அதில் ரயில்வே துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 7 சதவீதம் அதிகமாக தொகை என்று மத்திய அரசு சார்பில் கூறப்பட்டாலும், ரயில்வே அதிகாரிகள் இந்த தொகை போதாது எனத் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், ரயில்வே துறையில் தனியாருக்கு அனுமதியா ? என்பது குறித்து மத்திய ரெயில்வே அமைச்சர் பியூஸ் கோயலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், “ ரயில்வே துறையில் தனியாரும் அதிகமான பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். ஏன்அவர்கள ரயில்வேயில் பங்கேற்க கூடாது? அவர்கள் ரயில்வேயில் பங்கெடுத்தால், நம்முடைய திறமையின் அளவு அதிகரிக்கும், அதிகமான முதலீட்டை கொண்டு வர முடியும்.

நடப்பு நிதிஆண்டு பட்ஜெட்டில் ரயில்வேக்கு ரூ.1.31 லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2018-19ம் ஆண்டு ரூ.1.48 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியை திட்டமிட்ட செலவுகளுக்கு செலவிடமுடியும். ரயில்வேயில் வரும் இழப்புகளை, திறமையான நிர்வாகத்தின் மூலமே சரிக்கட்ட முடியும்

ரயில்வே துறையில் 150 ஆண்டுகால பழமையான சிக்னல் முறை செயல்பட்டு வருகிறது. இதை நவீனமயமாக்க ரயில்வே ஏற்கனவே முடிவு எடுத்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இடிசிஎஸ் எனப்படும் ஐரோப்பிய ரயில்கட்டுப்பாட்டு முறைதான் இப்போது உலகளவில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதை இந்தியாவுக்கு கொண்டு வர முயல்கிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் அந்த நவீன சிக்னல் முறை இந்தியாவில் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.

இவ்வாறு அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இதற்கிடையே ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ ரயில்வே துறையில் தனியாரை புகுத்த அரசு தீவிரமாக இருக்கிறது. தனியாருக்கு தனியார ரயில் தடம் அமைத்து, அதில் தனியார் ரயில்கள் விட தீவிரமாக ரயில்வே வாரியம் ஈடுபட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x