Published : 04 Mar 2024 06:56 AM
Last Updated : 04 Mar 2024 06:56 AM

இமாச்சல் முதல்வர் மீது தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏ குற்றச்சாட்டு

கோப்புப்படம்

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் 6 பேர் கட்சி மாறி பாஜக வேட்பாளருக்கு வாக்களித்தனர். இதனால் கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதுகுறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ ராஜிந்தர் ராணா கூறியதாவது:

சபாநாயகர் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளார். இதை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம். முதல்வர் சுக்விந்தர் சிங் குறுகிய மனம் கொண்டவராக உள்ளார். அவரது செயல்பாடுகளால், காங்கிரஸ் கட்சியில் மேலும் 9 எம்எல்ஏ.,க்கள் அதிருப்தியில் உள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தை சுக்விந்தர் சுகுவின் நண்பர்கள்தான் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு ராஜிந்தர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x