Last Updated : 27 Feb, 2018 07:24 PM

 

Published : 27 Feb 2018 07:24 PM
Last Updated : 27 Feb 2018 07:24 PM

ஐஎஸ்-க்கு என்னை விற்க முயன்றார்: கணவன் மீது என்.ஐ.ஏ.வில் குஜாராத் பெண் புகார்

 

தன்னை இஸ்லாம் மதத்துக்கு கட்டாய மதமாற்றம் செய்து கணவர் இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாத அமைப்புக்கு விற்கத் திட்டமிட்டார் என்று குஜாரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தேசிய விசாரணை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

ஹாதியாவுக்குப் பிறகே இத்தகைய புகார்களை எச்சரிக்கையுடன் அணுகும் தேசிய விசாரணை ஆணையம், இந்தப் புதுப்புகார் தம்பதியினரின் செல்போன் எண்களை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ளது. அதாவது குறுஞ்செய்திகளின் பிம்பம், இருவரும் பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் ஆகியவற்றை ஆய்வுக்கு அனுப்பியுள்ளது.

வெறுப்படைந்தார்...

இருவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பாக பெங்களூருவில் சந்தித்துத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் தன்னை புர்கா அணிய கணவர் வலியுறுத்தியதால் வெறுப்படைந்ததாக விசாரணை அதிகாரிகளிடம் இந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

கணவர் முகமத் ரியாஸ் ரஷீத் சவுதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து திரும்பிய போது சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார், பிப்ரவரி 4-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் கூறும்போது, “இப்போதைய குற்றம்சாட்டப்பட்ட நபரான ரஷீத்தை இந்தப் பெண் பெங்களூருவில் உள்ள கணினி மையம் ஒன்றில் சந்தித்துள்ளார். கேரளாவில் தன் பொறியியல் பட்டப்படிப்பின் முதல் செமஸ்டர் தேர்வில் தோல்வியடைந்தார் ரஷீத். அதன் பிறகு கேரளாவிலிருந்து பெங்களூருக்கு வந்தார். பெங்களூருவில் இருவரும் சந்தித்து திருமணம் செய்து கொண்ட பிறகு மீண்டும் கேரளாவுக்குக் குடிபெயர்ந்தனர். சில மாதங்களுக்குப் பிறகு இந்தப் பெண் பெற்றோரிடம் திரும்பி வந்தார்.

வழக்கு:

இது தொடர்பாக என்.ஐ.ஏ. கணவன் ரஷீத் உட்பட 9 பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. ஹாதியா வழக்கைப் படித்த பிறகு இந்தப் பெண் கேரள உயர் நீதிமன்றத்தை நாடியதையடுத்து என்.ஐ.ஏ. வழக்கு தொடர்ந்துள்ளது.

என்.ஐ.ஏ தரவுகளின் படி. திருமணம் முடித்து கேரளா சென்ற பிறகு சட்ட விரோதமாக பெண்ணை அடைத்து வைத்ததாகவும் பிறகு மிரட்டி ஜெட்டாவுக்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கு ஐஎஸ்-இடம் இவரை விற்க முயன்றாதகவும் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x