‘மடியில் அமர்ந்து, கைகளைப் பற்றியபடி…’ - இந்திரா நினைவு தினத்தில் ராகுல் உருக்கம்

‘மடியில் அமர்ந்து, கைகளைப் பற்றியபடி…’ - இந்திரா நினைவு தினத்தில் ராகுல் உருக்கம்
Updated on: 
1 min read

புதுடெல்லி: முன்​னாள் பிரதமர் இந்​திரா காந்​தி​யின் 42-வது நினைவு தினமான நேற்று, டெல்​லி​யில் உள்ள அவரது நினைவிடமான சக்தி ஸ்தலத்​தில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி, காங்​கிரஸ் தலை​வர் மல்​லிகார்​ஜுன கார்கே, கட்​சி​யின் நாடாளு​மன்​றத் தலை​வர் சோனியா காந்தி, கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பிரியங்கா காந்தி உள்​ளிட்ட மூத்த தலை​வர்​கள் பலரும் மரியாதை செலுத்​தினர்.

இதனிடையே, ராகுல் காந்தி தனது பாட்டி இந்​திரா காந்​தி​யின் நினைவு​களைப் பகிர்ந்து, சிறு வயதில் அவருடன் எடுத்த புகைப்​படத்தை ‘எக்ஸ்’ தளத்​தில் வெளி​யிட்​டுள்​ளார். “பாட்டி, நீங்​கள் எனக்கு அளித்த அழகான பரிசு இது. இதன் மதிப்பை நான் அப்​போது நினைத்​துப் பார்த்​ததில்லை” என்று அவர் உருக்​க​மாகக் குறிப்​பிட்​டார்.

மேலும் அந்​தப் பதி​வில், பாட்​டி​யின் மடி​யில் அமர்ந்து, அவரது இரு கைகளை​யும் பிடித்​த​படி, அவர் சொன்ன சம்​ஸ்கிருத ஸ்லோகங்​களைத் திருப்​பிச் சொன்ன நினைவு​களை ராகுல் குறிப்​பிட்​டுள்​ளார்.

இந்​திரா காந்​திக்கு மரியாதை செலுத்​திய கர்​நாடக முதல்​வர் டி.கே. சிவகுமார் கூறும்​போது, ‘‘இந்​திரா காந்தி ஒரு இரும்​புப் பெண்​மணி. நாட்​டின் முன்​னேற்​றத்​துக்​காகப் புரட்​சிகர​மான முடிவு​களை எடுத்து, உல​கமே இந்​தி​யாவை திரும்பிப் பார்க்​கச் செய்​தவர்.

‘ஏழ்​மையை ஒழிப்​போம்’ என்ற முழக்​கத்​தின் மூலம் ஏழைகள் மற்​றும் அடித்​தட்டு மக்​களின் முன்​னேற்​றத்​துக்​காக மனம் உரு​கிப் பாடு​பட்ட இணை​யற்ற தலை​வர். சுதந்​திர இந்​தி​யாவின் வரலாற்​றில் அவரது பங்​களிப்பு மிக முக்​கிய இடத்​தைப் பெற்​றுள்​ளன. அவரது நினைவு​கள் என்​றும் போற்​றத்​தக்​கவை” என்​றார்.

1984 அக்​.31-ம் தேதி டெல்​லி​யில் உள்ள தனது இல்​லத்​தில், தனது இரு பாது​காவலர்​களால் இந்திரா காந்தி சுட்​டுக் கொல்​லப்​பட்​டார்.

‘மடியில் அமர்ந்து, கைகளைப் பற்றியபடி…’ - இந்திரா நினைவு தினத்தில் ராகுல் உருக்கம்
சீனாவில் ஆதரவற்ற இளைஞரின் திருமண விழாவில் விலை உயர்ந்த பரிசுகளுடன் குவிந்த 10 ஆயிரம் பேர்

X