Published : 11 Feb 2024 11:37 PM
Last Updated : 11 Feb 2024 11:37 PM

‘எங்களது இந்துத்துவா அரசியலை இஸ்லாமிய மக்கள் ஆதரிக்கின்றனர்’ - உத்தவ் தாக்கரே

மும்பை: தங்களது இந்துத்துவா பாணி அரசியலை இஸ்லாமிய மக்கள் ஆதரிப்பதாக மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் விளக்கியுள்ளார்.

“இஸ்லாமிய சமூக மக்கள் நமது பக்கம் இருக்கின்றனர். இந்துத்துவாவை பின்பற்றும் எனக்கு ஏன் ஆதரவு வழங்குகிறீர்கள் என இஸ்லாமிய மக்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்களோ, உங்களது பாணி இந்துத்துவா எங்கள் வீடுகளில் அடுப்பு எரியவும், பாஜக பாணி இந்துத்துவா எங்கள் வீடுகளை எரியூட்டும் என்றனர்.

நாம் தேச பக்தியுள்ள இந்துக்கள். பகவான் ராமர் நமது நெஞ்சத்தில் உள்ளார். இதுதான் நமது இந்துத்துவா. பரத் ரத்னா விருது யாருக்கு, எப்போது அறிவிக்க வேண்டுமென்ற விதிகள் முன்பு இருந்தன. இப்போது பிரதமர் மோடி, தனக்கு நினைவில் வரும் நபர்களுக்கு அதை அறிவிக்கிறார். பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டவர்கள் அதற்கு தகுந்தவர்கள் அல்ல என நான் சொல்ல வரவில்லை. ஆனால், அதன் பின்னணியில் வாக்குகள் குறி வைக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநில அரசியலில் முக்கிய கட்சிகளாக திகழும் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரிந்து எதிர் எதிர் அணியில் செயல்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x