Published : 30 Aug 2014 09:16 AM
Last Updated : 30 Aug 2014 09:16 AM

அருங்காட்சியகமாகிறது எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல் பிறந்த வீடு

ஆங்கில எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல்லின் பிறப்பிடமான பிஹாரில் உள்ள அவரது வீட்டை அருங்காட்சியகமாக மாற்ற முடிவெடுத்துள்ளது அம்மாநில அரசு.

பிரபல ஆங்கில எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல் இங்கிலாந்துக்காரர் ஆவார். இவர் ‘அனிமல் ஃபார்ம்', ‘1984' போன்ற புகழ்பெற்ற புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது இயற்பெயர் எரிக் ஆர்தர் ப்ளேர் என்பதாகும்.

இந்தியாவில் ஆங்கிலேய அரசு ஆட்சி செய்து கொண்டிருந்த போது இவரது தந்தை ரிச்சர்ட் ப்ளேர் பிஹார் மாநிலத்தில் ஐ.சி.எஸ். ஆகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

பிஹாரில் உள்ள மோதிஹரி எனும் கிராமத்தில் 1903ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி ஆர்வெல் பிறந்தார். இங்கு அவர் ஓராண்டு மட்டுமே வாழ்ந்தார். அதற்குப் பிறகு அவர் இங்கிலாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஆர்வெல் பிறந்த இடத்தில் இன்றும் அவர் தனது பெற்றோருடன் தங்கியிருந்த வீடு உள்ளது. சிதிலமடைந்த இந்த வீட்டைப் பராமரிக்க முன்பு எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வில்லை. 2009ம் ஆண்டு இந்த வீடு புதுப்பிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை.

இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு இந்த இடத்தில் மகாத்மா காந்தியின் நினைவாகக் கட்டிடம் எழுப்பப்படும் என்று சொல்லப்பட்டது. இது ஆர்வெல்லின் வாசகர்களிடையே பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. எனினும், எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் இந்த வீட்டைப் பராமரிப்பதற்காகச் சுமார் ரூ.60 லட்சம் பிஹார் அரசால் ஒதுக்கப்பட்டு ள்ளது. சுற்றுலா பயணிகளைக் கவரும் விதத்தில் இந்த வீட்டை அருங்காட்சி யகமாக மாற்ற இருப்பதாக பிஹார் கலாச்சாரத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கு அருகிலேயே காந்தியின் நினைவகம் அமைக்கப்பட உள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x