Published : 17 Feb 2018 10:55 AM
Last Updated : 17 Feb 2018 10:55 AM

திருமணம், சுற்றுலா ரயில்களில் குழுவாக செல்ல வேண்டுமா?- இனி ஆன்லைனில் ரயில் பெட்டி முன்பதிவு செய்யலாம்

ரயில்களில் திருமணம், சுற்றுலா போன்ற காரணங்களுக்காக குழுவாக பயணம் செய்ய ஏதுவாக ரயில் பெட்டி மற்றும் தனி சிறப்பு ரயில்களை, இனிமேல் ஆன்லைன் மூலமாகவே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ரயில்களில் திருமணம், சுற்றுலா, சமூக நிகழ்ச்சிகள் என பலவற்றிக்கும் ரயில் பெட்டியை ஒட்டுமொத்தமாக முன்பதிவு செய்ய முடியும். அவர்களுக்காக குறிப்பிட்ட ரயில்களில் கூடுதல் ரயில் பெட்டியை ரயில்வே நிர்வாகம் இணைக்கும். அதுபோலேவே சில அமைப்புகளின் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றிக்கு தனியாக சிறப்பு ரயில்களையும் ரயில்வே நிர்வாகம் இயக்குகிறது.

தற்போதைய நடைமுறைப்படி, ரயில் பெட்டி அல்லது சிறப்பு ரயில் வேண்டுவோர் அதற்காக ரயில்வே கண்காணிப்பாளர் அல்லது நிலைய அதிகாரியை நேரில் தொடர்பு கொண்டு கடிதம் அளிக்க வேண்டும். பின்னர் அதற்கான முழுத்தொகையையும் செலுத்தி ரசீது பெற வேண்டும். அதன் பிறகு பரிசீலனையை ஏற்று ரயில் பெட்டி ஒதுக்கீடு செய்யப்படும்.

சுற்றுலா ஏற்பட்டாளர்கள் உள்ளிட்டோர் தற்போது இந்த நடைமுறைபடியே ரயில் பெட்டிகளை கூடுதல் ரயில் பெட்டிகளை முன்பதிவு செய்து வருகின்றனர். ஆனால் இதற்கு அலைச்சல் மற்றும் கால தாமதம் ஏற்படுகிறது.

இதையடுத்து ரயில் பெட்டி அல்லது சிறப்பு ரயில் விடுவதற்கு, ஐஆர்சிடிசி இணையதளம் மூலமே ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கு ரயி்வே நிர்வாகம் வசதி அளித்துள்ளது. எனவே திருமணம், சுற்றுலா போன்ற காரணங்களுக்கு குழுவாக செல்ல விரும்புவோர் இனிமேல் அலைச்சல் இன்றி ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x