Last Updated : 18 Dec, 2023 07:31 AM

1  

Published : 18 Dec 2023 07:31 AM
Last Updated : 18 Dec 2023 07:31 AM

3 மாநில தேர்தல் தோல்வியால் இறங்கிவரும் காங்கிரஸ்: பிராந்தியக் கட்சிகளுடன் கூட்டணிக்கு தயார்

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் பெரிய கட்சியாகஇருந்து அதன் தலைமைக்கு காங்கிரஸ் குறி வைத்திருந்தது. இதற்காக, மபி, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் இண்டியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மியும், சமாஜ்வாதியும் கேட்ட ஒரு சில தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் மறுத்தது. ஆனாலும் காங்கிரஸால் 3 மாநிலங்களிலும் வெற்றி பெற முடியவில்லலை. இச்சூழலில், இண்டியா கூட்டணியுடன் முழுமையாக இணைந்து மக்களவை தேர்தலில் தீவிரம் காட்ட வேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்காக, இண்டியா கூட்டணியில் தோழமைக் கட்சிகள்கேட்கும் தொகுதிகளை காங்கிரஸ் ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், வெற்றி என்பது உறுதிஇல்லை என்றாலும், குறைந்தபட்சம் பாஜக.வுக்கு தனிமெஜாரிட்டி கிடைக்காதபடி வீழ்த்துவதும் நோக்கமாகி விட்டது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறியதாவது:

‘செல்வாக்கான மாநிலங்களில் நாங்கள் சீனியராக இருந்தாலும், அங்கு தாக்கம் கொண்ட இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு கேட்கும் தொகுதிகளை ஒதுக்குவதைத் தவிரவேறு வழியில்லை. அதேபோல், பிராந்தியக் கட்சிகள் செல்வாக்குள்ள மாநிலங்களில் எங்களுக்கு கிடைப்பதை பெற்றுக் கொண்டு நாம் ஜுனியர் கூட்டணியாக இருக்க தயாராகி விட்டோம். இந்த தொகுதிகள் உடன்பாடு டிசம்பர் 19 இண்டியா கூட்டணி கூட்டத்தில் துவங்கும் என எதிர்பார்க்கிறோம்.

மூன்று மாநில தேர்தல் தோல்விக்கு பின் சோனியா குடும்பத்தின் தனிப்பட்ட செல்வாக்கும் கேள்விக்குறியாகிவிட்டது. இதனால், ராகுலின் இரண்டாவது பாதயாத்திரைக்கு பதிலாக, உபியில் மட்டும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் ராகுலுடன், பிரியங்காவும் இடம்பெறுகிறார். முக்கிய பொதுக்கூட்டங்கள் பெரும்பாலும் இண்டியா கூட்டணியுடன் இணைந்தே நடைபெறும். எங்களது முக்கிய கூட்டணியான திமுகவிடம், அதன்தலைவர்கள் கவனமாக பேசும்படியும் கோரியுள்ளோம். இவ்வாறு காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.

வட மாநிலங்களில் பஞ்சாப், மபி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், ஹரியாணா, உத்தராகண்ட் மற்றும் இமாச்சல் ஆகிய மாநிலங்களில் முக்கிய கட்சியாக காங்கிரஸ்உள்ளது. தென் இந்தியாவில் கர்நாடகா, கேரளா, ஒடிசா, தெலங்கானா மற்றும் ஆந்திராவில் காங்கிரஸுக்கு செல்வாக்கு உண்டு. இந்த இரண்டின் வடக்கில் 110 மற்றும் தெற்கு மாநிலங்களில் 116 தொகுதிகள் உள்ளன. இத்துடன் அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்த்தால் காங்கிரஸுக்கு சுமார் 250 தொகுதிகளில் பாஜகவுடன் அல்லது இண்டியாவில் சேராத கட்சிகளை எதிர்க்க வேண்டி இருக்கும். இதுபோன்ற காரணங்களால் தனது கொள்கையை காங்கிரஸ் மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x