Published : 03 Dec 2023 11:13 AM
Last Updated : 03 Dec 2023 11:13 AM

வசுந்தரா ராஜே முன்னிலை; சச்சின் பைலட் பின்னடைவு - ராஜஸ்தான் ஸ்டார் வேட்பாளர்கள் நிலவரம்

சுந்தரா ராஜே

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அரச பரம்பரையை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜே 7,000 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். | பார்க்க > ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் நிலவரம்

ராஜஸ்தானில் ஆட்சி அமைக்க 100 தொகுதிகள் தேவை என்ற நிலையில், முற்பகல் 1 மணி நிலவரப்படி பாஜக 113 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதேவேளையில், ஆளும் காங்கிரஸ் கட்சி 70 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து இந்தத் தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளது. காங்கிரஸும் பாஜகவும் நேரடியாக மோதிக் கொள்ளும் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் 1998 தேர்தலுக்குப் பிறகு, எந்தத் தேர்தலிலும் ஆளுங்கட்சியும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டதில்லை. 25 ஆண்டுகளாகத் தொடரும் இந்தப் போக்கை முறியடிக்கத் துடிக்கிறார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட். ஆனால், தற்போதய நிலவரப்படி, ராஜஸ்தானில் ஆட்சியமைக்கத் தீவிரம் காட்டும் பாஜகவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது.

தற்போதைய நிலவரப்படி ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். ஆனால், காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் டோன்ங்க் தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அவர் இந்த டோன்ங்க் தொகுதியில்தான் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். ராஜஸ்தானின் அரச பரம்பரையை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜே ஜல்ராபட்டன் சட்டமன்றத் தொகுதியில் தனது போட்டியாளரான காங்கிரஸின் ராம்லால் சவுகானை எதிர்த்து போட்டியிட்டு 7,000 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வித்யாதர் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சீதாராம் அகர்வாலை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தியா குமாரி 420 வாக்குகள் பெற்று முன்னுலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

2003-ம் ஆண்டு முதல் இந்தத் தொகுதியில் வசுந்தரா ராஜே தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். இந்த முறையும் அவர் வெற்றி பெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெற்றால், வசுந்தரா ராஜேவே முதல்வர் தேர்வாக இருப்பார் என பாஜக தரப்பில் பேசப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x