Published : 04 Jan 2018 04:06 PM
Last Updated : 04 Jan 2018 04:06 PM

"அசாம் அரசு வெளியிட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு வரைவு வங்காளிகளை வெளியேற்றுவதற்கான சதி"

அசாம் அரசு வெளியிட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு வரைவு அசாமிலிருந்து வங்காளிகளை வெளியேற்றுவதற்கான சதி என்று திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சவுகதா ராய் கூறியுள்ளார்.

அசாமில் 3.29 கோடி மக்கள் வசிக்கின்றனர். அசாம் மாநிலம் வங்கதேசத்தை ஒட்டி அமைந்துள்ளதால் அங்கு வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகள் குடியேறி விடுகின்றனர். இதனால் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், யார் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. அசாம் மக்களோடு மக்களாக அவர்கள் கலந்து வசித்து வருவதால் அதிகாரிகளுக்கு அவர்களை இனம் பிரிப்பதில் சிக்கல் உள்ளது.

இதைத் தடுப்பதற்காக அங்கு தேசிய குடிமக்கள் பதிவேட்டை அசாம் மாநில அரசு தயார் செய்து வருகிறது. இதற்காக அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களைச் சரிபார்த்தல், ஆவணங்களைச் உறுதி செய்தல் என பல முறைகளில் அசாம் மாநில அதிகாரிகள் இந்த பதிவேட்டைத் தயார் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் முதன்முறையாக 1.9 கோடி பேர் அடங்கிய தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முதல் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது.

 ஆனால் இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், தலைவர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் விடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இன்று (வியாழக்கிழமை) மக்களவையில் கேள்வி நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சவுகதா ராய் அசாம் அரசு வெளியிட்டுள்ள குடிமக்கள் பதிவேடு, மேற்கு வங்கதினரை அசாமிலிருந்து வெளியேற்றுவதற்கான சதி என்று குற்றச்சாட்டினார்.

இது குறித்து அவர் கூறும்போது,"கிட்டதட்ட 1 கோடியே 30 லட்சம் பேரின் பெயர்கள் இந்த பட்டியலில் விடுப்பட்டுள்ளது. இது மேற்கு வங்கதினரை அசாமிலிருந்து வெளியேற்றுவதற்கான சதி செயல். மேற்கு வங்கதினர் பல தலைமுறைகளாக அசாமில் வசித்து வருகின்றனர். அவர்கள்அசாமில் தங்கயிருக்க அனுமதி அளிக்க வேண்டும்.

அவர்களும் சாதரண குடிமக்கள்தான். இது ஒரு சதி செயல் என்று மேற்கு வங்க முதல்வர் முன்னரே தெரிவித்திருக்கிறார். ஆனால் அசாம் முதல்வரோ அவர்கள் அசாமில் இருக்க உரிமை இல்லை என்கிறார். இது ஒரு தீவிர பிரச்சினை" என்றார்.

மேலும் இது தொடர்பாக திரிணாமுல் மக்களவை உறுப்பினர்கள் மக்களவை முன் போராட்டம் நடத்தினார் .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x