Published : 26 Jul 2014 01:46 PM
Last Updated : 26 Jul 2014 01:46 PM

உத்தரகண்ட் சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி: 3 தொகுதிகளிலும் பாஜகவுக்கு தோல்வி

உத்தரகண்ட் சட்டமன்றத்தில் காலியாக இருந்த 3 தொகுதிக ளுக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.

தார்சுலா தொகுதியில் மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் 20 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

தொய்வாலா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹிரா சிங் பிஷ்ட் 6000 வாக்கும், சோமேஷ்வர் (ரிசர்வ்) தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரேகா ஆர்யா 9000 வாக்கும் அதிகம் பெற்று வெற்றி பெற்றனர். தேர்தல் முடிவுகளை மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராதா ரதூரி வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

தார்சுலா தொகுதியை தக்க வைத்துக் கொண்ட காங்கிரஸ், பாஜக வசமிருந்து தொய்வாலா, சோமேஸ்வர் தொகுதிகளைக் கைப்பற்றியது.

தொய்வாலா தொகுதி எம்எல்ஏ ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், சோமேஷ்வர் தொகுதி எம்எல்ஏ அஜய் தாம்தா ஆகியோர் மக்கள வைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் இந்த தொகுதிகள் காலியாகின.

முதல்வர் போட்டியிட வசதி யாக, தார்சுலா தொகுதி எம்எல்ஏ பதவியிலிருந்து ஹரீஷ் தாமி விலகினார். 3 தொகுதிகளுக்கும் ஜூலை 21ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

தார்சுலா தொகுதியில் போட்டி யிட்ட முதல்வர் ராவத் துக்கு 31214 வாக்குகள் கிடைத் தன. அவரை எதிர்த்துப் போட்டி யிட்ட பாஜக வேட்பாளர் பி.டி. ஜோஷிக்கு 10610 வாக்குகள் கிடைத்தன. மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றதால் 70 உறுப்பினர் கொண்ட சட்டப் பேரவையில் அதன் பலம் 32-லிருந்து 35 ஆக உயர்ந்துள்ளது. பாஜகவின் பலம் 30-லிருந்து 28-ஆக குறைந்துள்ளது.

2012-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியின் 3 எம்எல்ஏக்கள், உத்தரகண்ட் கிராந்தி தளம் கட்சியின் ஒரு எம்எல்ஏ, 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் இடம் பெற்ற முற்போக்கு ஜனநாயக முன்னணி ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

மாநில சட்ட சபைத் இடைத் தேர்தலில் கிடைத்த வெற்றி மக்கள வைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி யால் துவண்டிருந்த காங்கிரஸுக்கு உத்வேகம் கொடுத்திருக்கிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x