Published : 30 Jul 2014 05:52 PM
Last Updated : 30 Jul 2014 05:52 PM

நாடாளுமன்ற உணவு தரக்குறைவாக இருப்பதாக மாநிலங்களைவில் எம்.பிக்கள் புகார்

நாடாளுமன்ற உணவு விடுதியில் வழங்கப்படும் உணவு சுகாதாரமானதாக இல்லை என்றும், அதை உட்கொண்ட எம்.பி.க்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதாகவும் மாநிலங்களவையில் எம்.பி.க்கள் புகார் எழுப்பினர்.

மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தின்போது, நாடாளுமன்ற வளாக உணவு விடுதியில் வழங்கப்படும் உணவு, தரமானதாக இல்லை என்று மாநிலங்களவையில், உறுப்பினர்கள் சிலர் பூஜ்ஜிய நேரத்தின் போது புகார் தெரிவித்தனர்.

அப்போது ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த கே.சி தியாகி பேசும்போது, "சமாஜ்வாதி உறுப்பினர்கள் ராம் கோபால் யாதவ் மற்றும் ஜெயா பச்சன் உள்ளிட்ட சிலர், நாடாளுமன்ற வளாகத்தில் உணவு விடுதியின் உணவு உண்ட பின்னர், உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டனர். அங்கு வழங்கப்படும் உணவு தரம் வாய்ந்ததாக இல்லை" என்றார்.

மேலும், இவை எதிர்க்கட்சிகளை பேச விடாமல் தடுக்க ஆளும் கட்சி செய்யும் சதி என்றும் ராம் கோபால் யாதவ், கிண்டலாக பேசினார்.

யுபிஎஸ்சி தேர்வு சர்ச்சை, நித்தின் கட்கரி உள்ளிட்ட அமைச்சர்களின் வீடுகளில் ஒட்டுக்கேட்பு கருவி பொறுத்தப்பட்டது தொடர்பான சர்ச்சை இன்று இரு அவைகளிலும் எழுப்பப்பட்டது. இதனால் பகல் 12 மணி வரை அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது. பின்னர் கூடிய மாநிலங்களவையில், உணவு பொருள் தரப் பிரச்சினை குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பேசிய ஜெயா பச்சன், "நானும் இதனால் பாதிக்கப்பட்டேன். பட்ஜெட் மீதான விவாதங்கள் நீண்ட கடந்த சில நாட்களில், எம்.பிக்கள் அனைவரும் வளாக விடுதியிலேயே உணவு சாப்பிட நேர்ந்தது. இதனால் பல எம்.பிக்கள் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர்" என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய நாடாளுமன்ற உணவுத்துறை குழு உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராஜீவ் ஷுக்லா, "நாடாளுமன்றத்திற்கு உணவு வகைகள் காலை 6 மணிக்கு கொண்டுவரப்படுகிறது. இவை அனைத்தும் மாலை வரை வைத்திருப்பதாலேயே இந்த அசவுகரியம் ஏற்படுகிறது.

முன்னதாக, விடுதியில் நாளின் இடையே உணவு வகைகள் தயாரிக்கப்பட்டன. ஆனால் பெரிய அளவில் எரிவாயுப் பொருட்கள் உபயோகப்படுத்தப்படுவதால், எதிர்ப்பாராத விபத்து நேரக்கூடும் என்று முன்னாள் சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார். இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக விடுதியின் சமையலறை செயல்படவில்லை" என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, இது குறித்து அவசர நிலையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

நாட்டிலேயே நாடாளுமன்ற உணவு விடுதியில் உணவு வகைகள் மிக குறைந்த விலையில் விற்க்கப்படுகின்றன. இங்கு உணவு வகைகளின் விலை குறைந்தபட்சமாக ரூ.12 ஆக உள்ளது. அதிகபட்சமாக ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி ரூ.34க்கு விற்கபடுவது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x