Published : 20 Dec 2017 04:27 PM
Last Updated : 20 Dec 2017 04:27 PM

ஐக்கிய ஜனதாதள மாநிலங்களவை எம்.பி வீரேந்திர குமார் பதவி விலகல்

கேரளாவைச் சேர்ந்த ஐக்கிய ஜனதாதள மாநிலங்களவை எம்.பி வீரேந்திர குமார் பதவி விலகினார்.

பிஹாரில் ஐக்கிய ஜனதா தள கட்சி கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்தது. இதற்கு, கேரள மாநில ஐக்கிய ஜனதாதள தலைவரும், மாநிலங்களவை எம்.பியுமான வீரேந்திர குமார் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு உண்மையான வெற்றி கிடைக்கவில்லை என சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், அவர் இன்று (புதன்) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவிற்கு தனது ராஜினமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது

‘‘நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்.பியாக தான் சட்டப்பூர்வமாக இருந்து வருகிறேன். அவர் பாஜக கூட்டணியில் இணைந்ததை நான் விரும்பவில்லை. எனவே எனது எம்.பி பதவியில் இருந்து விலகியுள்ளேன்’’ எனக் கூறியுள்ளார்.

நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளத்தை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதை தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் அதிருப்தி தலைவர் சரத் யாதவ் மற்றும் அன்வர் அலி ஆகியோர், மாநிலங்களவை எம்.பி பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x