Published : 15 Dec 2017 03:52 PM
Last Updated : 15 Dec 2017 03:52 PM

கார் விபத்தில் 67 வயது பெண்மணி பலி: கிரிக்கெட் வீரர் ரஹானே தந்தை கைது

புனே, கோல்ஹாபூரில் அஜிங்கிய ரஹானே தந்தை ஓட்டிவந்த கார் வயதான பெண்மணி ஒருவர் மீது மோத அவர் உயிரிழந்தார், இதனையடுத்து ரஹானேயின் தந்தை மதுகர் பாபுராவ் ரஹானே (54) போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

வெள்ளிக்கிழமை காலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. புனே-பெங்களூரு தெசிய நெடுஞ்சாலையில் காகல் தாலுக்கில் இந்த விபத்து நடந்துள்ளது.

போலீஸார் தரப்பின் படி, ரஹானே குடும்பத்தினர் கடற்கரை சுற்றுலா கிராமமான தர்கர்லிக்கு கோல்ஹாபூர் வழியாகச் சென்றனர். காரை ஓட்டிச் சென்றது கிரிக்கெட் வீரர் ரஹானேயின் தந்தை மதுகர் பாபுராவ் ரஹானே, காரை வேகமாக ஓட்டி வந்த போது ரோட்டில் நின்று கொண்டிருந்த பெண்மணி மீது காரை மோதினார். அந்தப் பெண்மணியின் பெயர் ஆஷா காம்ப்லே, இவருக்கு வயது 67.

ஆஷா என்ற இந்தப் பெண்மணி சாலையில் நின்று கொண்டிருந்ததாகவும் பாபுராவ் ரஹானே காரை உரிய நேரத்தில் காரைத் திருப்ப முடியாமல் போனதால் காரை அவர் மீது மோதிவிட்டார் என்று போலீஸார் தரப்பு கூறியுள்ளது.

உள்ளூர்வாசிகள் உடனடியாக விபத்தில் காயமடைந்த அந்தப் பெண்மணியை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர், ஆனால் அங்கு காயத்தின் தீவிரம் காரணமாக அவர் மரணமடைந்தார்.

இதனையடுத்து காகல் போலீஸ் நிலையத்தில் அலட்சியத்தினால் மரணம் ஏற்பட்டது தொடர்பான சட்டப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு ரஹானேயின் தந்தை மதுகர் பாபுராவ் ரஹானே கைது செய்யப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x