Last Updated : 03 Dec, 2017 05:50 PM

 

Published : 03 Dec 2017 05:50 PM
Last Updated : 03 Dec 2017 05:50 PM

மும்பையில் இன்றுமுதல் இனி ஞாயிறுதோறும் சைக்கிள் பாதைகள்: தேவேந்திர பட்னாவிஸ் பாராட்டு

மும்பையில் உள்ள சைக்கிள் பிரியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக முதன்முதலாக ஞாயிறுதோறும் சைக்கிள் பாதை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான போலீஸ் மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கு மஹாராஷ்டிர மாநில முதல்வர் பட்னாவிஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இன்று முதல் மும்பை நகரத்தின் முக்கிய இடமான நரிமன் பாயிண்ட் என்சிபிஏ தியேட்டரிலிருந்து இருந்து வார்லி கடற்கரைக்குச் செல்லும் சைக்கிள் ஓட்டிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு பாதைகள் இருக்கும்.

இந்த மாற்றம் குறித்து மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:

''இது மும்பைக்காரர்களுக்கு இன்னொரு சிறந்த செய்தி. 'ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சைக்கிள் பாதை' என்ற பாராட்டத்தக்க முயற்சியை மேற்கொண்டவர்கள் மும்பை போலீஸ் ஆணையரும் மும்பை நகராட்சி ஆணையரும். இன்று காலையிலிருந்தே அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவிட்டது. இது மும்பையில் சைக்கிள் ஓட்டும் கலாச்சாரத்தை ஊக்குவிக்க ஒரு முயற்சி ஆகும். மும்பைவாசிகள் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் காலை 6 மணியிலிருந்து 10 மணிவரை 11 கி.மீ.தொலைவுக்கு இணை பாதைகளில் அவர்கள் செல்ல முடியும். இதுபோல இன்னும் நிறைய வர வேண்டும்.

இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

மக்கள் உடல்நலத்தின் முக்கியத்துவம் கருதி காற்று மாசுவை குறைக்கும் வகையில், மாநகரத்தின் மற்ற பகுதிகளிலும் பிரிஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் நிர்வாகம் இதனை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. சைக்கிள்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு பாதைகள் எனும்வகையில் தடுப்பு போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வழங்குவதும் இதன் விரிவாக்கங்களில் ஒன்று.

சைக்கிளில் செல்ல விரும்புபவர்கள், சைக்கிள் மற்றும் அதற்கான ஹெல்மெட்டுகளை வாடகைக்கு எடுத்துச் செல்ல, 11 கிமீ பாதையில் நான்கு முனைகளில் வசதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை, யுவ சேனாவின் தலைவர் ஆதித்யா தாக்கரேவும் சைக்கிள் பாதையில் செல்லும் திட்டத்தோடு வந்திருந்ததாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x