Published : 18 Dec 2017 03:38 PM
Last Updated : 18 Dec 2017 03:38 PM

இமாச்சல் தேர்தல்: அமைச்சர் தானி ராம் ஷாண்டில் 4 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

இமாச்சலப் பிரதேச தேர்தலில்,  காங்கிரஸ் வேட்பாளரும், தற்போதைய அமைச்சருமான தானி ராம் ஷாண்டில், பாஜக வேட்பாளர் ராஜேஷ் காஷ்யப்பை விட 4 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்

இமாச்சலில் காங்கிரஸ் கட்ச ிதற்போது  ஆட்சியில் உள்ளது. முதல்வராக வீரபத்ர சிங் பொறுப்பு வகிக்கிறார். இந்த மாநில சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்தது.

முதல்வர் வீர்பத்ர சிங், முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமால் உட்பட முக்கிய பிரபலங்கள் மீண்டும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் 75.28 சதவீத வாக்குகள் பதிவாகின. காங்கிரஸும் பாஜகவும் 68 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இமாச்சலில் 68 தொகுதிகளில் பதிவான வாக்குகள்  இன்று (திங்கள்)  எண்ணப்பட்டு வருகின்றன.

மொத்தமுள்ள 68 தொகுதிகளில் பாஜக 45 இடங்களிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. ஒரு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், சோலன் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், தற்போதைய அமைச்சருமான தானி ராம் ஷாண்டில், பாஜக வேட்பாளர் ராஜேஷ் காஷ்யப்பை விட 4 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார். தானி ராம் 23,433 வாக்குகளும், பாஜகவின் ராஜேஷ் 23,429 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x