Published : 11 Dec 2017 10:37 AM
Last Updated : 11 Dec 2017 10:37 AM

அசாமில் ரயில் மோதி 6 யானைகள் பரிதாப பலி

அசாம் மாநிலத்தில் ரயில் மோதி குட்டி யானை உட்பட 6 யானைகள் பரிதாபமாக இறந்தன.

அசாம் மாநிலம் சோனிட்பூர் மாவட்டம் பலிபரா என்ற பகுதியில் நேற்று முன்தினம் இரவு 1 மணியளவில் கவுகாத்தி - நஹர்லகூன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது யானைக் கூட்டம் தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருந்தன. வேகமாக சென்ற ரயில் யானைகள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஒரு குட்டி யானை உட்பட 6 யானைகள் இறந்தன. விபத்து நடந்த பகுதி யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாகும். அடர்ந்த வனப்பகுதியாக இருந்த இடம் தற்போது 70 சதவீதம் அழிந்துவிட்டது. அதனால் காட்டு யானைகள் கிராமங்களுக்கு புகுந்துவிட்டன என்று உலக வனவிலங்கு நிதியத்தின் அதிகாரி கூறியுள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையில் மட்டும் இதுபோன்ற விபத்து உட்பட பல்வேறு காரணங்களால் 140 யானைகள் இறந்துள்ளதாக கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x