Published : 31 Dec 2017 07:52 AM
Last Updated : 31 Dec 2017 07:52 AM

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க 14 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு

வைகுண்ட துவாதசியான நேற்று திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் ஏழுமலையானை தரிசிக்க 14 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர்.

வைகுண்ட ஏகாதசி, துவாதசியை முன்னிட்டு, திருமலையில் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று, ஆயிரக்கணக்கான பக்தர்களின் வருகையால், சுவாமியை தரிசிக்க 30 மணி நேரம் வரை காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக, நேற்று முன்தினம் மாலை 6 மணி வரை வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு மட்டுமே துவாதசியன்று தரிசனம் வழங்க முடிவு செய்யப்பட்டது. எனவே, நேற்று வருகை தந்த பக்தர்கள் சுவாமியை தரிசிக்க 14 மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்நிலையில், இன்று முதல் இரண்டு நாள்கள் விடுமுறை என்பதால், திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

முக்கோட்டி சக்கர ஸ்நானம்: வைகுண்ட ஏகாதசியான நேற்று முன்தினம் காலையில் தங்க ரதத்தில் உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவி சமேதமாய் மாட வீதிகளில் பவனி வந்து அருள் பாலித்தார். இதனை தொடர்ந்து, துவாதசியான நேற்றைக்கு அதிகாலை, கோயில் புஷ்கரணியில் (குளத்தில்) சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சன சேவைகள் நடந்ததன. இதனை தொடர்ந்து சக்கர ஸ்நானம் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆங்கில புத்தாண்டு ஏற்பாடுகள் ரத்து: ஆந்திர அறநிலையத் துறை உத்தரவின்பேரில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் இம்முறை ஆங்கில புத்தாண்டிற்கு சிறப்பு அலங்காரங்கள், ஏற்பாடுகளை ரத்து செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x