ஹவுதி தாக்குதலில் 2 இந்தியர் உட்பட 11 பேர் காயம்: சவுதியின் இறையாண்மையை மீறுவதாக இந்தியா கடும் கண்டனம்

ஹவுதி தாக்குதலில் 2 இந்தியர் உட்பட 11 பேர் காயம்: சவுதியின் இறையாண்மையை மீறுவதாக இந்தியா கடும் கண்டனம்
Updated on: 
1 min read

புதுடெல்லி: சவுதி அரேபியத் தலைநகர் ரியாத்​தின் நிதி மாவட்டத்​தில் உள்ள கோபுரம் மீது ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்​திய ட்ரோன் தாக்​குதலுக்கு இந்​தியா கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.

இத்​தாக்​குதலில் 2 இந்​தி​யர்​கள், 3 நேபாளி​கள், 2 சவுதி குடிமக்​கள், 4 எகிப்​தி​யர்​கள் என மொத்​தம் 11 பேர் காயமடைந்​தனர். பொது​மக்​கள், பொருளா​தார, எரிசக்தி உள்​கட்​டமைப்​பு​களைக் குறிவைக்​கும் இத்​தகைய தாக்​குதல்​கள் சவு​தி​யின் இறை​யாண்​மையை மீறு​வ​தாக​வும், பிராந்​தி​யப் பாது​காப்​பை​யும் ஸ்திரத்​தன்​மை​யை​யும் சீர்​குலைப்​ப​தாக​வும் இந்​தியா நேற்று தெரி​வித்​தது.

சவுதி அரசுக்​குத் முழு ஆதரவை தெரிவித்த இந்​தி​யா, தாக்குதல்களை உடனடி​யாக நிறுத்​து​மாறு வலி​யுறுத்​தி​யுள்​ளது. காயமடைந்த இந்​தி​யர்​களுக்கு ரியாத்​தி​லுள்ள இந்​தி​யத் தூதரகம் உதவி வரு​கிறது. ரியாத், ஜெட்​டா, தம்​மாம், மதீனா நகரங்களுக்கான விமானங்​களை நவம்​பர் 30 வரை இண்​டிகோ நிறு​வனம் ரத்து செய்​துள்​ளது.

பிப்​ர​வரி​யில் தொடங்​கிய மேற்கு ஆசிய மோதல்​களால் இது​வரை 24 இந்​தி​யர்​கள் உயி​ரிழந்​துள்​ளனர். அக்​டோபரில் ரியாத் மற்​றும் தம்​மாம் விமான நிலை​யங்​கள் மீதான ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்​குதல்​களில் 3 இந்​தி​யர்​கள் உயிரிழந்தனர். சவு​தி​யில் 45 லட்​சம் இந்​தி​யர்​களும், ஒட்​டுமொத்த மேற்கு ஆசி​யாவில் 1 கோடிக்​கும் அதி​க​மான இந்​தி​யர்​களும் வசித்து வரு​வது குறிப்​பிடத்​தக்​கது.

ஹவுதி தாக்குதலில் 2 இந்தியர் உட்பட 11 பேர் காயம்: சவுதியின் இறையாண்மையை மீறுவதாக இந்தியா கடும் கண்டனம்
சிறப்புக்குழு விசாரணை தொடக்கம்: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவுக்கு கடும் சிக்கல்

X