லாரி - வேன் மோதி விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

லாரி - வேன் மோதி விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

மும்பை: ம​கா​ராஷ்டி​ரா​வின் தானே மாவட்​டம், கல்​யாண்​-அஹில்​யாநகர் நெடுஞ்​சாலை​யில் உள்ள கோவிலி கிராமத்​தில் நேற்று காலை சிமென்ட் கலவை இயந்​திர லாரி ஒன்று அங்​குள்ள பாலத்தை கடந்​துள்​ளது. அப்​போது எதிரே பயணி​களு​டன் வேக​மாக சென்ற வேன் லாரி மீது மோதி​யது. இதில் வேன் பலத்த சேதம் அடைந்​தது.

விபத்து பற்றி அறிந்த உள்​ளூர் மக்​களும் போலீ​ஸாரும் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்று மீட்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். இதில் வேனில் இருந்து 3 பெண்​கள், 8 ஆண்​கள் என 11 பேர் சடல​மாக மீட்​கப்​பட்​டனர். மேலும் படு​கா​யம் அடைந்த இரு​வர் மருத்​து​வ​மனையில் அனுமதிக்​கப்​பட்​டனர்.

லாரி - வேன் மோதி விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு
நிதிஷ் குமார் பதவியை ராஜினாமா செய்ய உள்ள நிலையில் பிஹார் புதிய முதல்வர் இன்று தேர்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in