நிதிஷ் குமார் பதவியை ராஜினாமா செய்ய உள்ள நிலையில் பிஹார் புதிய முதல்வர் இன்று தேர்வு

நிதிஷ் குமார் பதவியை ராஜினாமா செய்ய உள்ள நிலையில் பிஹார் புதிய முதல்வர் இன்று தேர்வு
Updated on
2 min read

பாட்னா: பிஹார் தலைநகர் பாட்​னா​வில் தேசிய ஜனநாயக கூட்​டணி எம்​எல்​ஏக்​களின் கூட்​டம் இன்று நடக்​கிறது. இதில் அந்த மாநிலத்​தின் புதிய முதல்​வர் தேர்வு செய்​யப்பட உள்​ளார்.

பிஹாரில் பாஜக, ஐக்​கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்), இந்​துஸ்​தான் அவாம் மோர்ச்​சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்​சிகள் அடங்​கிய தேசிய ஜனநாயக முற்​போக்கு கூட்​டணி ஆட்சி நடை​பெறுகிறது. ஐக்​கிய ஜனதா தள தலை​வர் நிதிஷ் குமார், பிஹார் முதல்​வ​ராக 10-வது முறை​யாக பதவி வகிக்​கிறார். அண்​மை​யில் நடந்த மாநிலங்​கள​வைத் தேர்​தலில் அவர் எம்​பி​யாக தேர்வு செய்​யப்​பட்​டார். கடந்த 10-ம் தேதி மாநிலங்​களவை எம்​பி​யாக அவர் பதவி​யேற்​றுக் கொண்​டார்.

இந்த சூழலில் ஆளுநர் லெப்​டினென்ட் ஜெனரல் சையத் அதா ஹஸ்​னனை இன்று மாலை 3.30 மணிக்கு சந்​திக்​கும் முதல்​வர் நிதிஷ் குமார் ராஜி​னாமா கடிதத்தை அளிக்​கிறார். அதற்கு முன்​பாக இன்று மாலை 2 மணிக்கு பாஜக எம்​எல்​ஏக்​களின் கூட்​டம் பாட்​னா​வில் நடை​பெறுகிறது. இதைத் தொடர்ந்து இன்று மாலை 3 மணிக்கு ஐக்​கிய ஜனதா தள எம்​எல்​ஏக்​களின் கூட்​டம் நடை​பெறுகிறது.

இதன்​பிறகு பாஜக, ஐக்​கிய ஜனதா தளம் உட்பட தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் அனைத்து எம்​எல்​ஏக்​கள் பங்​கேற்​கும் கூட்​டம் பாட்​னா​வில் நடை​பெற உள்​ளது. இதில் புதிய முதல்​வர் தேர்வு செய்​யப்பட உள்​ளார். துணை முதல்​வரும் பாஜக மூத்த தலை​வரு​மான சாம்​ராட் சவுத்ரி முதல்​வர் பதவிக்​கான போட்​டி​யில் முன்​வரிசை​யில் உள்​ளார். பாஜக மூத்த தலை​வர்​கள் சஞ்​சீவ் சவு​ராசி​யா, ஜானக் ராம், ஸ்ரேயசி சிங், தரம்​ஷீலா குப்தா ஆகியோ​ரும் முதல்​வர் பதவிக்கு காய்​களை நகர்த்தி வரு​கின்​றனர்.

மத்​திய வேளாண் அமைச்​சர் சிவ​ராஜ் சிங் சவு​கான், புதிய முதல்​வரை தேர்வு செய்​யும் பணிக்​கான பொறுப்​பாள​ராக நியமிக்​கப்​பட்டு உள்​ளார். அவர் கூறும்​போது, ’’அனைத்து எம்​எல்​ஏக்​களின் கருத்​துகளைக் கேட்​டறிந்து புதிய முதல்​வர் தேர்வு செய்​யப்​படு​வார்’’ என்று தெரி​வித்​தார்.

பாட்​னா​வில் உள்ள ஆளுநர் மாளி​கை​யில் நாளை புதிய அரசு பதவி​யேற்பு விழா நடை​பெற உள்​ளது. தேசிய ஜனநாயக கூட்​டணி எம்​எல்​ஏக்​கள் கூட்​டத்​தில் ஒரு​மன​தாக தேர்ந்​தெடுக்​கப்​படும் தலை​வர், பிஹாரின் புதிய முதல்​வ​ராக பதவி​யேற்க உள்​ளார். நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார், துணை முதல்​வ​ராகப் பதவி​யேற்​பார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. புதிய அரசில் இடம்​பெறும் அமைச்​சர்​கள் குறித்து தீவிர​மாக ஆலோ​சிக்​கப்​பட்டு வரு​கிறது. தற்​போதைய அமைச்​சர​வை​யில் இடம்​பெற்​றிருக்​கும் பலருக்கு மீண்​டும் வாய்ப்பு வழங்​கப்​படும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

பிரதமர் நரேந்​திர மோடி இன்று மாலை பாட்னா செல்​கிறார். நாளை நடை​பெற உள்ள புதிய அரசு பதவி​யேற்பு விழா​வில் அவர் பங்​கேற்​பார் என்று பாஜக வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. மேலும் பாஜக ஆளும் மாநிலங்​களின் முதல்​வர்​கள், மத்​திய அமைச்​சர்​கள்​, கட்​சி​யின்​ மூத்​த தலை​வர்​களும்​ பதவி​யேற்​பு விழா​வில்​ கலந்​து கொள்​ள உள்​ளனர்​.

நிதிஷ் குமார் பதவியை ராஜினாமா செய்ய உள்ள நிலையில் பிஹார் புதிய முதல்வர் இன்று தேர்வு
கர்நாடகாவில் அமைச்சர் பதவி கேட்டு 30 எம்எல்ஏ-க்கள் டெல்லிக்கு பயணம்: முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in