Published : 22 Dec 2017 09:54 AM
Last Updated : 22 Dec 2017 09:54 AM

2022-க்குள் 100 ஜிகாவாட் சூரிய மின்சக்தி

2022-ம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தித் திறனை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது அமைச்சர் ஆர்.கே.சிங் கூறுகையில், ‘‘கடந்த டிசம்பர் 15-ம் தேதி நிலவரப்படி 16,676 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்திக்கான கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், 6,500 மெகாவாட் உற்பத்தி திறனுக்கான பணிகள் நடந்து வருகின்றன. 2019-20-ல் 30 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யப்படும். 2022-ம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட் சூரிய ஒளி மின் உற்பத்தி திறனை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x