Published : 31 Dec 2017 08:00 AM
Last Updated : 31 Dec 2017 08:00 AM

போலி விளம்பரத்தை நம்பி ஏமாந்தேன்: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வேதனை

போலி விளம்பரத்தை நம்பி ஏமாந்ததாகவும் இதுபோன்ற விளம்பரங்களை அரசு தடுக்க வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மாநிலங்களவையில் வெங்கய்யா நாயுடு நேற்று முன்தினம் பேசும்போது கூறியதாவது:

நான் குடியரசு துணைத் தலைவர் ஆனதும், 28 நாட்களில் உடல் எடையைக் குறைக்கும் மாத்திரை இருப்பதாக கேள்விப்பட்டேன். இதுகுறித்து சிலரிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், விளம்பரத்தில் கூறுவது போல் உண்மை இல்லை எனக் கூறினர். பின்னர் அதுகுறித்த விளம்பரத்தைப் பார்த்தேன். அதில் கேட்டுக்கொண்டபடி, ரூ.1,230 செலுத்தினேன். எனக்கு ஒரு பாக்கெட் வந்தது. அதில் அசல் மருந்தைப் பெற மேலும் ரூ.1000 செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகத்தில் புகார் செய்தேன். இதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் அந்த விளம்பரம் அமெரிக்காவிலிருந்து வெளியானது தெரிய வந்துள்ளது. எந்த நாட்டிலிருந்து வெளியானாலும், மக்களை ஏமாற்றக் கூடிய இதுபோன்ற போலியான விளம்பரங்களைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x