Published : 22 Nov 2017 12:23 PM
Last Updated : 22 Nov 2017 12:23 PM

தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்றவரை தாக்கிய கர்நாடக அமைச்சர்: வைரலாகும் வீடியோ

கர்நாடக அமைச்சர் சிவக்குமார், செல்ஃபி எடுக்க முயன்ற நபரின் கையை வேகமாக தட்டிவிட்டு தாக்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் மின்துறை அமைச்சராக இருப்பவர் டி.கே. சிவக்குமார். அம்மாநிலத்தில் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான நிகழ்ச்சி இன்று (புதன் கிழமை) பெல்காமில் நடைபெற்றது. இதில் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து ஊடகங்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர், அமைச்சர் சிவக்குமாருடன் இணைந்து செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது அமைச்சர் சிவக்குமார் செல்ஃபி எடுக்க முயன்ற நபரின் கையை வேகமாக தட்டிவிட்Iடு தாக்கினார்.

— ANI (@ANI) November 20, 2017

 அமைச்சரின் இந்த செயலால் நிகழ்ச்சியில் திடீரென பரபரப்பு நிலவியது. இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x