Published : 08 Jul 2014 10:58 AM
Last Updated : 08 Jul 2014 10:58 AM

புதிய ராணுவ தலைமை தளபதி நியமனத்துக்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதிய ராணுவ தலைமைத் தளபதியாக தல்பீர் சிங் சுஹாக் நியமிக்கப்பட்டதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

தற்போது இந்திய ராணுவ தலைமைத் தளபதியாக விக்ரம் சிங் உள்ளார். இவர் இம்மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். அவரைத் தொடர்ந்து புதிய ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்தை எதிர்த்து லெப்டினென்ட் ஜெனரல் ரவி தஸ்தானே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தல்பீர் சிங்கின் பதவி உயர்வில் விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்து அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மேற்கு பிராந்திய கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் சஞ்சீவ் சாச்ராவின் பதவி உயர்வையும் எதிர்த்து தஸ்தானே வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதற்கு மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘தல்பீர் சிங் சுஹாக் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை முன்கூட்டியே திட்டமிடப் பட்ட செயல். அவர் மீதான நடவ டிக்கை சட்ட விரோதமானது, முறை யற்றது’ என்று கூறப்பட் டிருந்தது.

இம்மனு நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. ‘ராணுவ தளபதியாக தல்பீர் சிங் சுஹாக் நியமிக்கப்படுவதற்கு தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை. அதற்கான எந்த அவசரமும் அவசியமும் இல்லை,’ என்று கூறி தடை விதிக்க மறுத்தனர்.

தல்பீர் சிங் சுஹாக் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x