Published : 13 Jul 2014 10:00 AM
Last Updated : 13 Jul 2014 10:00 AM

எனது வீட்டில் இருந்த ரூ.1.14 கோடி உறவினரின் பணம்: பாஜக எம்.பி கிரிராஜ் சிங் போலீஸிடம் வாக்குமூலம்

தனது வீட்டில் பணம் வைக்கப் பட்டிருந்தது குறித்து தனக்கு தெரியாது என்று பாஜக நவாடா தொகுதி எம்.பி. கிரிராஜ் சிங் கூறியுள்ளார். அது தனது உறவினர் ராகேஷ் சிங்கின் பணம் என்றும் அவர் தெரிவித்தார். பாட்னாவில் உள்ள பாஜக எம்.பி. கிரிராஜ் வீட்டிலிருந்து ரூ.1.14 கோடி, 600 அமெரிக்க டாலர், நகைகளை திருடிச் சென்ற 4 பேர் கும்பலொன்று, அவ்வழியே ரோந்து சென்ற போலீஸாரிடம் கடந்த ஜூலை 9-ம் தேதி சிக்கியது.

அந்த பணம், நகை உள்ளிட்டவற்றை கிரிராஜ் சிங் வீட்டில் திருடியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

இது தொடர்பாக கிரிராஜ் சிங்கிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர். நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்த கிரிராஜ் சிங், பாட்னாவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணபுரி காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை சென்றார்.

அப்போது போலீஸார் முன்னி லையில் தனது வாக்குமூலத்தை கிரிராஜ் சிங் அளித்தார். “பணம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள எனது உறவினர் ராகேஷ் சிங்கிற்கு சொந்தமானது. அவரது தொழில் தொடர்பான பணப் பரிவர்த் தனைக்காக எனது வீட்டில் வைத்திருக்கிறார்.

ஆனால், அந்த பணத்தை எனது வீட்டில் அவர் வைத்திருந்தது பற்றி எனக்குத் தெரியாது. எனது சகோதரர் ஜெய்ராஜ் சிங்கிற்கு அதைப் பற்றி நன்றாகத் தெரியும்” என்று கிரிராஜ் சிங் தனது வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில், அந்த பணம் எப்படி வந்தது என்பதற்கான ஆவணங்களை தருமாறு போலீஸார் கிரிராஜ் சிங் மற்றும் அவரின் உறவினர் ராகேஷ் சிங்கிடம் கூறியுள்ளனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் கிரிராஜ் சிங் கூறியதாவது: “பணம் அனைத்தும் ராகேஷ் சிங்கினுடையது என்று தெரிவித்துள்ளேன். 600 அமெரிக்க டாலரை வைத்திருந்தது, அந்நியச் செலாவணி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய அளவுக்கு குற்றமா என்பதை போலீஸார்தான் முடிவு செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x