Last Updated : 28 Nov, 2017 11:53 AM

 

Published : 28 Nov 2017 11:53 AM
Last Updated : 28 Nov 2017 11:53 AM

9 வயது சிறுமி உட்பட 3 பாகிஸ்தானியர்களுக்கு மருத்துவ விசா: சுஷ்மா

இந்தியாவில் சிகிச்சை பெற 9 வயது சிறுமி உட்பட 3 பாகிஸ்தானியர்களுக்கு மருத்துவ விசா வழங்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக டேனிஷ் மேமன் என்னும் நபர் தன்னுடைய 9 வயது மகள் மரியாவின் தலசீமியா சிகிச்சைக்காக மருத்துவ விசா கேட்டு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்த சுஷ்மா, ''மனியா டேனிஷ், உங்களுக்கு உடனடியாக விசா கிடைக்க பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்திடம் கேட்டுக்கொள்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல மரியம் ஆசிம் என்பவர் தன்னுடைய தந்தைக்காக மருத்துவ விசா கோரியதை அடுத்து, அவருக்கும் விசா அளிக்கப்படும் என்று சுஷ்மா உறுதி அளித்துள்ளார்.

விசா, வெளிநாடுகளில் பிரச்சினை உள்ளிட்ட அயலக விவகாரங்களில் சுஷ்மா ஸ்வராஜ், தனது அமைச்சகம் சார்பில் உடனடி நடவடிக்கை எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x