Last Updated : 04 Oct, 2017 12:36 PM

 

Published : 04 Oct 2017 12:36 PM
Last Updated : 04 Oct 2017 12:36 PM

மீசை வைத்ததற்காக குஜராத் தலித் இளைஞர் மீது தாக்குதல்

மீசை வைத்ததற்காக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் இதுபோன்ற சம்பவம் இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளது.

குஜராத் மாநிலம் லிம்போர்டா கிராமத்தில் கடந்த வாரம் (செப்.25ம் தேதி) பியுஷ் பார்மர் என்ற தலித் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மீசை வைத்துக் கொண்டதற்காக அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ராஜ்புட் வகுப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளானவரின் உறவினரும் தற்போது இதே காரணத்துக்காக தாக்கப்பட்டுள்ளார். அவரது முதுகில் பிளேடால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். டைஜன்ட் மஹேரியா என்ற அந்த இளைஞரை இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது குறித்து போலீஸ் டிஎஸ்பி வி.என்.சோலன்கி கூறும்போது, "டைஜன்ட் நடந்துவந்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் பின்புறத்தில் இருந்து தாக்கியுள்ளனர். இதில் டைஜன்டுக்கு ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது. அவர் அபாய கட்டத்திலிருந்து மீண்டுவிட்டார். முதல் தகவல் அறிக்கை பதியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்" என்றார்.

எஃப்ஐஆர் பதிவு செய்ததற்காக..

கடந்த 25-ம் தேதி பியூஷ் பார்மர் தாக்கப்பட்டபோது அவருடன் டைஜன்டும் இருந்திருக்கிறார். அந்த வழக்கில் உயர் சாதியினருக்கு எதிராக போலீஸில் புகார் செய்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதற்கு பழி வாங்கும் வகையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

டைஜன்டின் உறவினர் கூறும்போது, "டைஜன்டை தாக்க ரூ.1.5 லட்சம் கூலி வாங்கியதாக தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x