துறைமுக வளாகத்தில் சல்பர் குவியலில் நிகழ்ந்த வேதியியல் மாற்றம்: தலைமைச் செயலகம் அருகே திடீர் புகை மூட்டம்

மூச்சுத் திணறலால் பொதுமக்கள் அவதி
| படங்கள்: எல்.சீனிவாசன் |

| படங்கள்: எல்.சீனிவாசன் |

Updated on
2 min read

சென்னை: சென்னை தலை​மைச் செயல​கம் அருகே திடீரென புகைமூட்​டம் பரவிய​தால், பொது​மக்​கள் மற்​றும் பாது​காப்​புப் பணி​யில் இருந்த காவல் துறை​யினர் மூச்​சுத்​திணறல் பாதிப்​புக்கு உள்​ளாகினர்.

சென்னை தலை​மைச் செயல​கத்​துக்கு முதல்​வர், அமைச்​சர்​கள், உயர் அதி​காரி​கள் மற்​றும் அலு​வலர்​கள் உள்​ளிட்ட ஆயிரக்​கணக்​கானோர் தினந்​தோறும் வந்து செல்​கின்​றனர். பொது​மக்​களும் தங்​களது கோரிக்​கைகள் மற்​றும் குறை​களை தெரிவிக்க தலை​மைச் செயல​கத்​துக்கு வருகை தரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், நேற்று மதி​யம் தலை​மைச் செயல​கம் எதிரே உள்ள பகு​தி​யில் திடீரென வெள்ளை நிற புகைமூட்​டம் உரு​வானது. இதனால் அப்​பகு​தி​யில் பதற்​ற​மான சூழல் நில​வியது. இதையடுத்து தீயணைப்பு துறைக்கு உடனடி​யாக தகவல் கொடுக்​கப்​பட்​டது.

இதற்​கிடையே அடர்த்​தி​யாக பரவிய இந்த புகை மூட்​டத்​தால், சுமார் ஒரு கிலோ மீட்​டர் சுற்​றளவு பகு​தி​யில் இருந்த பொது​மக்​கள் மற்​றும் வாகன ஓட்​டிகள் மூச்​சுத் திணறல், கண் எரிச்​சல், தொண்டை எரிச்​சல், குமட்​டல், வாந்தி போன்ற பாதிப்​பு​களுக்கு ஆளாகினர்.

நிலை​மை​யின் வீரி​யத்தை புரிந்து கொண்டு தலை​மைச் செயல​கத்​தில் பணிபுரிந்து கொண்​டிருந்த காவலர்​களும், அங்கு வந்​திருந்த பொது​மக்​களும் முகத்தை கைக்​குட்​டையால் மூடியபடி சென்று வந்​தனர். இதற்​கிடையே இந்​தப் புகை எங்​கிருந்து வெளி​யானது என்​பது குறித்து காவல் துறை​யினர் மற்​றும் அதி​காரி​கள் விசா​ரணை மேற்​கொண்​டனர்.

அப்​போது, தலை​மைச் செயல​கம் எதிரே உள்ள சென்னை துறைமுக வளாகத்​தில் இருந்து புகை வெளி​யானது தெரிய வந்​தது. துறை​முக வளாகத்​தில் கையாளப்​பட்ட சல்​பர், அதிக வெப்​பம் காரணமாக வேதி​வினை ஏற்​பட்டு புகை மற்​றும் நச்​சுத்​தன்மை கொண்ட வாயுவை உரு​வாக்​கிய​தாக தகவல் வெளி​யானது.

தகவல் கிடைத்​தவுடன் தீயணைப்​புத் துறை​யினர் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்​று, சல்​பர் மீது தண்​ணீர் பீய்ச்சி அடித்து நிலை​மையை கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்டு வந்​தனர். இதையடுத்து 10-க்​கும் மேற்​பட்ட ஆம்​புலன்ஸ் வாக​னங்​கள் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக அப்​பகு​திக்கு அனுப்​பப்​பட்டு பொது​மக்​களுக்கு தேவை​யான உதவி​கள் வழங்​கப்​பட்​டன.

இதற்​கிடையே, சல்​பர் கையாளும் பகு​தி​யில் பாது​காப்பு நடை​முறை​கள் முறை​யாக பின்​பற்​றப்​பட்​ட​தா? என்​பது குறித்து விளக்​கமளித்த துறை​முக அதி​காரி​கள், “துறை​முக வளாகத்​தில் வெளி​நாட்​டில் இருந்து இறக்​குமதி செய்​து, கப்​பலில் இருந்து இறக்கி வைக்​கப்​பட்​டிருந்த சல்​பர் (கந்​தகம்) குவியல், அதிக வெப்​பம் காரண​மாக வேதி​யியல் மாற்​றம் அடைந்து வெண்​பு​கை​யாக வெளி​யேறி பரவியது.

இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு உடனடி​யாக தகவல் தெரிவிக்​கப்​பட்​டு, நிலைமை விரைந்து கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்டு வரப்​பட்​டது.” என தெரி​வித்​தனர்.

இதே​போல் தமிழ்​நாடு மாசு கட்​டுப்​பாட்டு வாரிய அதி​காரி​களும் சம்பவ இடத்​துக்கு வந்து சோதனைக்​காக மாதிரி​களை எடுத்​துச் சென்​றனர். பின்​னர் அவர்​கள் அளித்த விளக்​கத்​தில், “வழக்​க​மாக காற்​றில் நுண்​துகள்​கள் மட்​டுமே இருக்​கும்.

ஆனால், தலை​மைச் செயல​கம் உள்​ளடக்​கிய சுற்று வட்​டாரப் பகு​தி​களில் புகைமூட்​டத்​துடன் பரவிய காற்​றில், நைட்​ரஜன் டை ஆக்​ஸைடு, அமோனியா கலந்​திருப்​பது தெரிய​வந்​துள்​ளது. இதனால்​ தான்​ பா​திப்​பு ஏற்​பட்​டுள்​ளது.” என்​று தெரி​வித்​தனர்​.

<div class="paragraphs"><p>| படங்கள்: எல்.சீனிவாசன் |</p></div>
சென்னை | இளம் பெண்களிடம் தவறாக நடந்த 3 பேரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in