நீலகிரியில் நிலச்சரிவு அபாயம் உள்ள 125 இடங்களில் சென்சார் கருவிகள் பொருத்தத் திட்டம்

முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்து உயிரிழப்புகளைத் தடுக்க நடவடிக்கை
ஊட்டி லவ்டேல் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புத்துறை ஆராய்ச்சியாளர் குணால் மற்றும் குழுவினர்.

ஊட்டி லவ்டேல் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புத்துறை ஆராய்ச்சியாளர் குணால் மற்றும் குழுவினர்.

Updated on: 
1 min read

ஊட்டி: நீலகிரி மாவட்டத்​தில் நிலச்​சரிவு அபா​யம் உள்ள 125 இடங்​களை கண்​டறிந்​து, அங்கு நிலச்​சரிவை முன்​கூட்​டியே கணித்து எச்​சரிக்கை விடுக்​கும் நவீன சென்​சார் கருவி​களைப் பொருத்​து​வதற்​கான நடவடிக்​கை​கள் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

நீல​கிரி மற்​றும் அதன் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் கடந்த காலங்​களில் பெய்த கனமழை​யின்​போது, சுமார் 65 இடங்​களில் பெரிய அளவி​லான மண்​சரிவு மற்​றும் நிலச்​சரி​வு​கள் ஏற்​பட்​டன. இதனால் பொது​மக்​களின் இயல்பு வாழ்க்கை பாதிக்​கப்​பட்​டதுடன், போக்​கு​வரத்து மற்​றும் உள்​கட்​டமைப்​பு​களும் பெரு​மள​வில் சேதமடைந்​தன.

இது​போன்ற பாதிப்​பு​களைத் தடுக்க மாவட்ட நிர்​வாகம் மற்​றும் பேரிடர் மேலாண்​மைத் துறை சார்​பில் பல்​வேறு முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

இதன் ஒரு பகு​தி​யாக, மாவட்​டத்​தில் ஏற்​கெனவே 6 முக்​கிய இடங்​களில் சோதனை அடிப்​படை​யில் நவீன சென்​சார் கருவி​கள் பொருத்​தப்​பட்டு கண்​காணிக்​கப்​பட்டு வந்​தன. இந்த முயற்​சி​யின் பலன்​களைத் தொடர்ந்​து, திட்​டத்தை விரி​வுபடுத்த முடிவு செய்​யப்​பட்​டது.

இதன்​படி, நீல​கிரி மாவட்​டத்​தில் நிலச்​சரிவு அபா​யம் உள்ள மேலும் 125 இடங்​கள் கண்​டறியப்​பட்​டுள்​ளன. இந்த இடங்​களில் சென்​சார் கருவி​களைப் பொருத்​து​வதற்​கான ஆய்​வுப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

இதன் ஒரு பகு​தி​யாக, தமிழக பேரிடர் மீட்​புத் துறை ஆராய்ச்​சி​யாளர் குணால் தலை​மையி​லான குழு​வினர் குன்​னூர், பர்​லி​யாறு பகு​தி​களில் ஆய்வு மேற்​கொண்​டனர். தொடர்ந்​து,

நேற்று ஊட்டி லவ்​டேல், தலை​யாட்​டுமந்​து, கோடப்​பமந்​து, அண்ணா நகர் உள்​ளிட்ட பகு​தி​களில் நிலச்​சரிவு அபா​யம் குறித்து ஆய்வு செய்​தனர். இதுகுறித்து ஆராய்ச்​சி​யாளர் குணால் கூறும்​போது, “நீல​கிரி மாவட்​டத்​தில் நிலச்​சரிவு அபா​யம் உள்ள 125 இடங்​கள் கண்​டறியப்​பட்​டுள்​ளன.

அனைத்து இடங்​களி​லும் ஆய்வு செய்த பிறகு, கனமழைக் காலங்​களில் நிலச்​சரிவு ஏற்​படு​வதற்கு முன்பே எச்​சரிக்​கைத் தகவல்​களை அளிக்​கும் வகை​யில் சென்​சார் கருவி​கள் பொருத்​தப்​படும்” என்​றார்.

எவ்​வாறு செயல்​படும்?

இந்த நவீன சென்​சார் கருவி​கள் மண்​ணின் ஈரப்​ப​தம், நிலத்​தின் அசைவு​கள், பாறை​களின் நகர்வு உள்​ளிட்​ட​வற்​றைத் தொடர்ந்து கண்​காணிக்​கும். நிலச்​சரி​வுக்​கான அறிகுறிகள் தென்​படும்​போது, கட்​டுப்​பாட்டு அறைக்கு எச்​சரிக்​கைத் தகவல்​களை அனுப்​பும் வகை​யில் இக்​கருவி​கள் செயல்​படும்.

இந்​தத் தொழில்​நுட்​பத்​தின் மூலம் நிலச்​சரிவு ஏற்​படு​வதற்​கான அறிகுறிகளை முன்​கூட்​டியே கண்​டறிந்​து, அபா​யம் உள்ள பகு​தி​களில் வசிக்​கும் மக்​களைப் பாது​காப்​பான இடங்​களுக்கு வெளி​யேற்ற நடவடிக்கை எடுக்க முடி​யும்.

இதன் மூலம் உயி​ரிழப்​பு​களை​யும் பொருள் சேதங்​களை​யும் குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

<div class="paragraphs"><p>ஊட்டி லவ்டேல் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புத்துறை ஆராய்ச்சியாளர் குணால் மற்றும் குழுவினர். </p></div>
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு திமுக ஆதரவா? - மு.க.ஸ்டாலின் சூசக பதில்

X