எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான பணிக்கு 4 வாரங்கள் தடை

எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான பணிக்கு 4 வாரங்கள் தடை
Updated on
1 min read

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் வாயலூரில் அமைக்கப்பட்டு வரும் எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான பணியை தொடர 4 வாரங்கள் தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் துரைசாமி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: டான்ஜெட்கோ நிறுவனம் சார்பில், பொன்னேரி தாலுகா, வாயலூர் கிராமத்தில் 660 மெகா வாட் மின்னுற்பத்தி திறன் கொண்ட 2 அனல் மின் நிலையங்களுடன் கூடிய எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்துக்காக கடந்த 2014-ம் ஆண்டு, கடற்கரை ஒழுங்கு முறை மண்டல அறிவிக்கையின் கீழ் சுற்றுச்சூழல் அனுமதி பெற்றிருந்தது. அந்த அனுமதி காலாவதி ஆகிவிட்ட நிலையில், கட்டு மானப்பணிகள் தொடர்கிறது. இது விதிமீறலாகும். எனவே, டான்ஜெட்கோ நிறுவனம் புதிய சுற்றுச்சூழல் அனுமதி பெற்று பணிகளை தொடர உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுதாரர் கோரியிருந்தார்.

இந்த மனு அமர்வின் நீதித் துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் பிரசாந்த் கார்கவா முன்னிலையில் சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: இத்திட்டத்துக்காக பெற்ற சுற்றுச்சூழல் அனுமதி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் காலாவதியாகி விட்டது. உண்மையில், தற்போதைய நிலவரப்படி, சுற்றுச்சூழல் அனுமதியை நீட்டிக்குமாறு கோரி டான்ஜெட் கோ நிறுவனம் உரிய அதிகாரியிடம் எவ்வித விண்ணப்பமும் செய்ய வில்லை. செல்லுபடியாகும் சுற்றுச்சூழல் அனுமதி (EC) இல்லாத நிலையில் திட்டத்தை முன்னெடுப்பவர் கட்டுமானப் பணிகளை தொடராமல் இருப்பது பொருத்தமானதாக இருக்கும்.

எனவே, இத்திட்டம் தொடர்பான எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளவும். தொடரவும் டான்ஜெட் கோவுக்கு 4 வார காலத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. டான்ஜெட்கோ நிறுவனம் உரிய துறையை அணுகி. சுற்றுச்சூழல் அனுமதியை நீட் டிக்க விண்ணப்பிக்கலாம். அனு மதி கிடைத்தால். பணியை தொடரலாம். இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆக.10-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான பணிக்கு 4 வாரங்கள் தடை
கணவரை இழந்த பெண் காவலரை மறுமணம் செய்வதாக கூறி 97 பவுன் நகை, ரூ.42 லட்சம் பணம் ஏமாற்றிய ரவுடி கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in