

திருநீர்மலை பகுதியில் செயல் படும் சட்டவிரோத கிரஷர் குவாரிகளால் காற்றின் தரம் வெகுவாக பாதிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக விமல் என் பவர் சென்னை உயர் நீதிமன் றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: திருநீர்மலை பகுதியில் செயல்படும் சட்டவிரோத கிரஷர் குவாரிகளால் தீருநீர் மலை, அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் காற்றின் தரம் மாசடைந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு விதிகளின்படி குடி யிருப்புகள், கல்வி நிறுவனங் கள் மற்றும் ஆன்மிக தலங் களின் அருகே கிரஷர் குவாரி கள் நடத்த அனுமதி கிடையாது.
ஆனால், திருநீர்மலை பகுதி யில் செயல்படும் குவாரிகளுக்கு விதிகளுக்குப் புறம்பாக அனு மதி அளிக்கப்பட்டுள்ளது. தாம் பரத்தில் இருந்து மதுரவாயல் செல்லும் புறவழிச் சாலையில் திருநீர்மலையை ஒட்டிய பகுதி யில் ஏராளமான கிரஷர் குவாரி கள் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட் டிகளுக்கும், அப்பகுதி மக்களுக் கும் சுவாசக் கோளாறுகள் ஏற்படு கின்றன. எனவே, இந்த குவாரி கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதி பதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசா ரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக் கறிஞர் கே.சுரேஷ்பாபு, "திருநீர் மலை பகுதிகளில் செயல்படும் 4 கிரஷர் குவாரிகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. ஆனால், 10-க்கும் மேற்பட்ட குவாரிகள் சட்ட விரோதமாக இயங்கி வருகின் றன. இதுதொடர்பாக மாசு கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. அப்பகு திகளில் காற்றின் தரம் குறைந்து மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது" என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசு, செங்கல்பட்டு ஆட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகி யோர்வரும் ஜூலை2-க்குள்பதில ளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தனர்.