வங்கி மோசடி வழக்கில் 15 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

வங்கி மோசடி வழக்கில் 15 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
Updated on
1 min read

சென்னை: கடந்த 2010ம் ஆண்டு சேலம் இந்தியன் வங்கி, வீர பாண்டி கிளையில் சென்னையை சேர்ந்த தனியார் உர தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர்கள் ரூ.2.01 கோடி கடன் பெற்றுள்ளனர்.

ஆனால் அவர்கள் தங்களுக்கு சொந்தமில்லாத சொத்து ஆவணங்களை அடமானமாக வைத்து இந்த தொகையை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் சக்தி வேல், விஜயகுமாரி, ஆரோக்கிய சாமி மற்றும் வங்கியின் மேலாளர் பால சுப்பிரமணியன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டது.

ஆனால் ஆரோக்கிய சாமி என்பவர் மட் டும் வழக்கு பதிவு செய்ததில் இருந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். மேலும் வங்கியிலும் போலியான முகவரியை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த நபரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து தேடி வந்துள்ளனர். இதனிடையே நேற்று முன் தினம் தலைமறைவாக இருந்த ஆரோக்கிய சாமியை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

வங்கி மோசடி வழக்கில் 15 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: ஐவருக்கு ஆயுள்; ஒருவருக்கு 20 ஆண்டு சிறை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in