மானவ் சுதார் கவுன்டி கிரிக்கெட்டில் அசத்தல்

மானவ் சுதார் கவுன்டி கிரிக்கெட்டில் அசத்தல்
Updated on
1 min read

சவுத்தாம்டன்: க​வுன்டி கிரிக்கெட் சாம்​பியன்​ஷிப்​பில் இந்​தி​யா​வின் மானவ் சுதா​ரின் சிறப்​பான சுழற்​பந்து வீச்​சால் ஹாம்ப்​ஷயர் அணியை இன்​னிங்ஸ் மற்​றும் 129 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது வார்விக்‌ஷையர் அணி.

சவுத்​தாம்​டனில் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் வார்விக்‌ஷையர் அணி முதல் இன்​னிங்​ஸில் 398 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. இதையடுத்து பேட் செய்த ஹாம்ப்​ஷயர் முதல் இன்​னிங்​ஸில் 115 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து பாலோ-ஆன் ஆனது. பாலோ-ஆன் பெற்ற ஹாம்ப்​ஷயர் அணி 279 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய நிலை​யில் 154 ரன்​களுக்கு சுருண்​டது. இதனால் வார்விக்‌ஷையர் அணி இன்​னிங்ஸ் மற்​றும் 129 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

சுழற்​பந்து வீச்​சாள​ரான மானவ் சுதார் முதல் இன்​னிங்​ஸில் 15 ஓவர்​களை வீசி 42 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 3 விக்​கெட்​களை​யும், 2-வது இன்​னிங்​ஸில் 23.3 ஓவர்​களை வீசி 52 ரன்​களை வழங்கி 4 விக்​கெட்​களை​யும் வீழ்த்​தி​னார்​.

மானவ் சுதார் கவுன்டி கிரிக்கெட்டில் அசத்தல்
அமெரிக்காவைவிட ஆப்பிரிக்கா பெரிதாக இருக்கும் புதிய உலக வரைபடத்துக்கு ஐ.நா. சபை ஒப்புதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in