Published : 06 May 2024 04:10 AM
Last Updated : 06 May 2024 04:10 AM

கால்கள் உடைந்த நிலையில் வெள்ளை அரிவாள் மூக்கன் பறவை மீட்பு @ மேட்டூர்

மேட்டூரை அடுத்த பண்ணவாடியில் 2 கால்கள் உடைந்த நிலையில் காணப்பட்ட வெள்ளை அரிவாள் மூக்கன் பறவை.

மேட்டூர்: மேட்டூர் அருகே பண்ணவாடியில் 2 கால்கள் உடைந்த நிலையில் வெள்ளை அரிவாள் மூக்கன் பறவை மீட்கப்பட்டது.

மேட்டூர் அணை நீர்த் தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவை கொண்டது. நீர் வரத்து குறைந்து, அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இதனால் அணை நீர்த்தேக்கப் பகுதி வறண்டு ஆங்காங்கே குட்டை போல காட்சியளிக்கிறது. இதன் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவையினங்கள் அதிகளவில் படையடுத்து வருகின்றன.

அதன்படி, இந்திய வெள்ளை அரிவாள் மூக்கன், மஞ்சள் மூக்கு நாரை, சாம்பல் நாரை உள்ளிட்ட பறவையினங்கள் வருகின்றன. இந்நிலையில் பறவை ஆர்வலர்கள் நேற்று காலை மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியான பண்ணவாடிக்கு, பறவையினங்களை புகைப்படம் எடுக்க சென்றுள்ளனர்.

அப்போது, அரிய வகை பறவையான வெள்ளை அரிவாள் மூக்கன் 2 கால்கள் உடைந்த நிலையில் காயங்களுடன் இருப்பதை கண்டனர். பின்னர் பறவையை மீட்டு மேட்டூர் வனச்சரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர், கால்நடை மருத்துவரை வரவழைத்து பறவைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், பறவைக்கு கால்கள் உடைந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x