Last Updated : 06 Mar, 2024 09:23 PM

 

Published : 06 Mar 2024 09:23 PM
Last Updated : 06 Mar 2024 09:23 PM

பாதுகாப்பற்ற போர்வெல் அமைக்கும் பணியால் புகை மண்டலமாக மாறிய ஓசூர் அரசு மருத்துவமனை

ஓசூர்  அரசு மருத்துவமனை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆழ்த்துளை போர் அமைக்கும் பணியால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி நோயாளிகள் அவதியடைந்தனர்

ஓசூர்: ஓசூர் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு முன்பு பாதுகாப்பின்றி ஆழ்த்துளை போர் அமைக்கும் பணியின் போது புகை மண்டலமாக மாறியதால் நோயாளிகள் அவதியடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் தற்போது வறட்சியின் காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அதே போல் ஓசூர் அரசு தலைமை மருத்துவனையிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில் ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் தண்ணீர் பிரச்சினையைப் போக்க இன்று மாலை அவசரசிகிச்சைப் பிரிவு முன்பு ஆழ்த்துளை போர்வெல் அமைக்கும் பணி நடந்தது.

எந்த ஒரு முன்னெச்சரிக்கை பணிகளையும் மேற்கொள்ளாமல் போர் போட்டதால், மருத்துவமனை வளாகம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனால், நோயாளிகளின் உடைகள், உடைமைகள், படுக்கைகள் தூசிப் படந்தது. அதேபோல் அமர்ந்து சாப்பிட முடியாமல் நோயாளிகளின் உடன் வந்தவர்களும் அவதியடைந்தனர்

இது குறித்து நோயாளிகளின் உறவினர்கள் கூறும் போது,"மருத்துவமனையில் தண்ணீர் பிரச்சினையைப் போக்க ஆழ்த்துளை போர் அமைப்பது நல்லது தான், ஆனால் நோயளிகள் தங்கி உள்ள அறைகளில் உள்ள ஜன்னல்கள், கட்டிடங்களுக்கு தார் பாய் போன்று மூடிவிட்டு எந்த ஒரு பாதுகாப்பின்றி போர் போடுகின்றனர்.

மண் புகை பறக்காமல் இருக்க போர் போடும் போது அவ்வப்போது தண்ணீர் ஊற்ற வேண்டும் அதுவும் செய்யவில்லை. இதனால் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவு வார்டு முழுவதும் தூசிப் படந்து காணப்பட்டது. இதனால் மருத்துவமனையில் உள்ள ஆஸ்துமா, சுவாச நோயாளிகள் மற்றும் குழந்தைகள் மிகவும் அவதியடைந்தனர்" என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x