Published : 11 Mar 2021 14:38 pm

Updated : 03 Apr 2021 09:12 am

 

Published : 11 Mar 2021 02:38 PM
Last Updated : 03 Apr 2021 09:12 AM

178 - கந்தர்வகோட்டை(தனி)

178

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
ஜெயபாரதி அதிமுக
எம்.சின்னதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) திமுக
பி.லெனின் அமமுக
ஆதிதிராவிடர் மக்கள் நீதி மய்யம்
மோ.ரமிளா நாம் தமிழர் கட்சி

சட்டப்பேரவை தொகுதி மறு சீரமைப்பின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை தனி தொகுதியானது 2011-ல் உருவாக்கப்பட்டது.

இத்தொகுதியில், ஆதிதிராவிடர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக முக்குலத்தோர், முத்தரையர், உடையார் மற்றும் பிற இன மக்கள் வசித்து வருகிறார்கள்.

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 36 ஊராட்சிகள், கறம்பக்குடி ஒன்றியத்தில் 16 ஊராட்சிகள், குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் 41 ஊராட்சிகள், புதுக்கோட்டை ஒன்றியத்தில் 2 ஊராட்சிகள் மற்றும் கீரனூர் பேரூராட்சி ஆகியவை இந்த தொகுதியில் அடங்கியுள்ளன.

தொகுதி மக்கள் கோரிக்கைகள்

கந்தர்வகோட்டை பகுதி முற்றிலும் விவசாயம் நிறைந்த பகுதி. எனவே, விவசாயிகளுக்கு தேவையான நீர்நிலைகள் அனைத்தையும் பாதுகாத்து பராமரிக்க வேண்டும்.

இந்தப் பகுதியில் அதிக அளவில் முந்திரி சாகுபடி உள்ளதால் இங்கு அரசு முந்திரி கொள்முதல் நிலையம், முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

கந்தர்வகோட்டை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். கடைவீதியிலேயே பேருந்து நிலையத்தை கட்ட வேண்டும். மருதன்கோன்விடுதி அரசு கலைக் கல்லூரிக்கு மாணவர்கள் சிரமமின்றி சென்றுவர கூடுதல் பேருந்து இயக்க வேண்டும்.

கறம்பக்குடி பகுதியானது தொடர்ந்து பின்தங்கிய பகுதியாகவே இருப்பதால் இப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

தேர்தல் வரலாறு

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தொழில்கூடம் அமைக்க வேண்டும். மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு என தனி மணல் குவாரி அமைக்க வேண்டும். காவிரி உபரிநீரை இப்பகுதிக்கு கொண்டுவர வேண்டும் போன்றவை இத்தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

கடந்த 2016-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ப.ஆறுமுகம் 64,043 வாக்குகளும், திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் கே.அன்பரசன் 60,996 வாக்குகளும் பெற்றனர்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,00,810

பெண்

1,00,241

மூன்றாம் பாலினத்தவர்

20

மொத்த வாக்காளர்கள்

2,01,07

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

பா. ஆறுமுகம்

அதிமுக

2

டாக்டர் கே. அன்பரசன்

திமுக

3

எம். சின்னத்துரை

மார்க்சிஸ்ட்

4

எம். பழனிமாணிக்கம்

பாமக

5

மு. பழனியப்பன் (எ) புரட்சிகவிதாசன்

பாஜக

6

சி. மோகன்ராஜ்

நாம் தமிழர்

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

கந்தர்வகோட்டை தாலுகா

குளத்தூர் தாலுகா (பகுதி)

செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள்.

கீரனூர் (பேரூராட்சி),

ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சின்னன்கோன்விடுதி, வாண்டான்விடுதி, பண்டுவக்கோட்டை, மருதங்கோன்விடுதி, மயிலன்கோன்பட்டி, கறும்பவிடுதி, அம்புகோவில், பிலாவிடுதி, தீத்தான்விடுதி, குளந்திரான்பட்டு மற்றும் ரங்கியன்விடுதி கிராமங்கள், கறம்பக்குடி (பேரூராட்சி).

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

சுப்பிரமணியன்.N

அதிமுக

67128

2

கவிதைப்பித்தன்.S

திமுக

47429

3

செல்வராணி.R

ஐஜேகே

2974

4

ரெத்தினம்.V

சுயேச்சை

1357

5

முருகேசன்.M

பகுஜன் சமாஜ் கட்சி

1073

6

பாரதி.K

சுயேச்சை

842

7

ஆசைதம்பி.P

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

824

8

சித்ரா.R

சுயேச்சை

754

122381

தமிழக தேர்தல் களம்சட்டப்பேரவைத் தேர்தல்கந்தர்வகோட்டை தனி தொகுதிகந்தர்வகோட்டைTN Assembly Election 2021Assembly Election 2021Tamilnadu Assembly Election 2021தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021சட்டமன்றத் தேர்தல் 2021திமுகஅதிமுகமக்கள் நீதி மய்யம்தேமுதிகமதிமுகஅமமுகமு.க.ஸ்டாலின்எடப்பாடி பழனிசாமிகமல்கமல்ஹாசன்DmkAdmkMNMMakkal needhi maiamDMDKMkstalinEdapadi palanisamyDhinakaranVaikoKamalKamal haasanKhushbooGautamiLmuruganகுஷ்புகவுதமிஎல்.முருகன்நாம் தமிழர் கட்சிSeemanசீமான்TN ElectionTN Election 2021#tnelection2021

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x