Published : 28 Mar 2019 06:21 AM
Last Updated : 28 Mar 2019 06:21 AM

ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அமமுகவை அழிக்க சதி: தேர்தல் பிரச்சாரத்தின்போது டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

ஆட்சி அதிகாரத்தைப் பயன் படுத்தி அமமுகவை அழிக்க சதி செய்கிறார்கள் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன், சென்னை ராயபுரம் கல் மண்டபத்தில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார். வடசென்னை தொகுதி அமமுக வேட்பாளர் சந்தான கிருஷ்ணனை ஆதரித்து அவர் பேசியதாவது:

சென்னை முதல் கன்னியா குமரி வரை அனைத்துப் பகுதிகளிலும் அமமுகவுக்கு ஆதரவு இருப்பதால்தான் நம்மை அரசியலில் இருந்து எப்படியாவது ஓரம்கட்டிவிட வேண்டும் என்பதற்காக துரோகிகள் பல்வேறு சதித் திட்டங்களை ஆட்சி, அதி காரத்தைப் பயன்படுத்தி செய் கிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் நமது வழக்கறிஞர்கள் சட்டப் போராட்டம் நடத்தினர். அதனால், நமது வேட்பாளர்கள் அனைவருக்கும் ஒரே சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும் அமமுக வேட் பாளர்கள் 59 பேருக்கும் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். நாம் யாருக்கும் அஞ்சாமல் இருப்பதால்தான் எப்படியா வது நம்மை அழித்துவிடத் துடிக்கிறார்கள்.

மத்தியில் ஆளும் பாஜக வும், தமிழகத்தில் உள்ள மக்கள் விரும்பாத ஆட்சியினரும் கூட்டணி அமைத்துள்ளனர். தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் ஆட்சி மாற்றத் தைக் கொண்டுவர நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு தமிழக மக்களுக்கு கிடைத்திருக்கும் ஆயுதம்தான் நமது 59 வேட்பாளர்கள். அவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் இங்குள்ள மக்கள் விரோத ஆட்சியையும், டெல்லி யில் உள்ள தமிழகத்துக்கு எதிரான ஆட்சியையும் முடிவுக்கு கொண்டுவர நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வர், தனது மகனை வட சென்னையில் போட்டியிடச் செய்ய துணிவு இல்லாமல், தென் சென்னையில் போட்டி யிட வைத்துள்ளார். ராயபுரம் மக்கள் மீது அவருக்கு அவ் வளவு பயம் இருக்கிறது. இவ்வாறு தினகரன் பேசினார்.

அதைத்தொடர்ந்து காசி மேடு, திருவொற்றியூர் தேரடி, மாதவரம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் அமமுக வேட் பாளர்கள் சந்தானகிருஷ்ணன் (வட சென்னை), பொன்.ராஜா (திருவள்ளூர் - தனி) ஆகி யோரை ஆதரித்து தினகரன் பிரச்சாரம் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x