Published : 05 Apr 2016 03:56 PM
Last Updated : 05 Apr 2016 03:56 PM

26 - வேளச்சேரி

தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு சென்னையில் உருவாக்கப்பட்டது வேளச்சேரி தொகுதி. சென்னை மாநகராட்சியின் 177-வது வார்டில் இருந்து 182-வது வார்டுகளில் உள்ள அடையாறு கிழக்கு மற்றும் மேற்கு, திருவான்மியூர் கிழக்கு மற்றும் மேற்கு மற்றும் வேளச்சேரி, தரமணி, பெசன்ட்நகர் பகுதிகள் தொகுதியில் உள்ளன. தென்சென்னையில் வளர்ந்து வரும் முக்கிய பகுதியான வேளச்சேரியில் அடுக்குமாடி குடியிருப்புகள், ஷாப்பிங் மால்கள் அதிகரித்து வருகின்றன. ஆசியாவில் மிகப்பெரிய ஷாப்பிங் மாலான ஃபீனிக்ஸ் மால் வேளச்சேரில் உள்ளது. வேளச்சேரியின் முக்கிய அடையாளமாக வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையம் உள்ளது.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வேளச்சேரி தொகுதியில் தாழ்த்தப்பட்டோர், நாயக்கர் சமுதாய மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். 1972-ம் ஆண்டு வேளச்சேரியில் தாழ்த்தபட்டவர்களுக்கும், நாயக்கர்களுக்கும் இடையே பெரிய அளவினான சாதி கலவரமும் நடந்துள்ளது. இவை தவிர தொகுதியில் கிராமணி, முதலியார், பிராமனர் மற்றும் கிறிஸ்துவர்களும் வசிக்கின்றனர். இந்த தொகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் ஐடி நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். சாலை வசதிகள், மழைநீர் வடிக்கால் போன்றவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. பறக்கும் ரயில் ரயிலை பரங்கிமலை வரை நீட்டிக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் வேளச்சேரி பகுதியே முற்றிலும் மூழ்கியது. குடியிருப்புகள் சுற்றிலும் மழைநீர் சூழ்ந்ததால் ஒரு வாரத்திற்கும் மேலாக மக்கள் வீட்டுக்குள் முடங்கினர்.

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கால் வேளச்சேரி மக்கள் சுவாசக் கோளாறு உட்பட பல்வேறு நோய்களால் பாதிக்க்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக வேளச்சேரி தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 48 ஆயிரத்து 142 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 48 ஆயிரத்து 99 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 88 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 96 ஆயிரத்து 329 பேர் வாக்காளர்களாக உள்ளனர். கடந்த 2011-ம் தேதி நடந்த சட்டப்பேரவைத் தேர்தலை முதல் முறையாக வேளச்சேரி தொகுதி சந்தித்தது. அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்.கே.அசோக் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலை இரண்டாவது முறையாக சந்திக்கிறது வேளச்சேரி தொகுதி.

தொகுதியில் அடங்கும் பகுதிகள்

சென்னை மாநகராட்சியின் வார்டு எண் 151 முதல் 155 வரையுள்ள பகுதிகள்

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,49,598

பெண்

1,51,140

மூன்றாம் பாலினத்தவர்

90

மொத்த வாக்காளர்கள்

3,00,828

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

அசோக்

அதிமுக

82145

2

ஜெயராமன்

பாமக

50425

3

சரத்பாபு

சுயேச்சை

7472

4

தமிழிசை சௌந்தராஜன்

பிஜேபி

7048

5

செந்தில் குமார் ஆறுமுகம்

எல் எஸ் பி

1225

6

சேஷாத்ரி

ஐ ஜே கே

1036

7

கர்ணன்

பி எஸ் பி

658

8

ஜெய்சங்கர்

சுயேச்சை

596

9

விஜயகுமார்

பு பா

435

10

பாலகிருஷ்ணன்

சுயேச்சை

335

11

அன்பழகன்

எம்எம்கேஎ

317

12

கிருஷ்ணமூர்த்தி

சுயேச்சை

291

13

ராமசாமி

எ பி எம்

244

14

சிவகுமார்

சுயேச்சை

137

152364

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x