Published : 26 Apr 2014 10:02 AM
Last Updated : 26 Apr 2014 10:02 AM

காங்கிரஸின் துணைத் தேர்தல் அறிக்கை வெற்றிக்கான கடைசி முயற்சி: பாஜக - தேர்தல் ஆணையம் தடை விதிக்காதது ஏன்?

காங்கிரஸ் வெளியிட்டுள்ள துணை தேர்தல் அறிக்கை, அக்கட்சியின் வெற்றிக்கான கடைசி முயற்சி என்று பாரதிய ஜனதாவின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறினார்.

இது குறித்து அவர் நிருபர் களிடம் வெள்ளிக்கிழமை கூறிய தாவது:

வாரணாசியில் நரேந்திர மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை கண்டு காங்கிரஸ் கட்சி வெறுப்படைந்து விட்டது. இந்த வெறுப்பில் தேர்தல் ஆணையத்துக்கு சென்றவர்கள் யார் மீது புகார் அளிப்பார்கள் எனத் தெரியவில்லை. ஏனெனில், வாக்குப் பதிவு நாளில் மோடியின் மனு தாக்கல் இருப்பது தெரிந்தும், தேர்தல் ஆணையம் அதற்கு தடை விதிக்கவில்லை. இந்நிலையில் தேர்தல் ஆணையம் மீதே காங்கிரஸ் எப்படி புகார் அளிக்க முடியும்?

அவர்கள் அடைந்த வெறுப்பை இப்போது, ஊடகங்கள் மீது காட்டுகிறாகள். ‘ப்ளாப் ஷோ’க்களை ஊடகங்கள் எப்போதும் தங்கள் செய்திகளில் காட்டுவதில்லை. வாரணாசியின் ஊர்வலத்தில் இருந்த கூட்டம் நம் நாட்டில் மோடிக்கு இருக்கும் ஆதரவைக் காட்டியது.

மோடியின் வெற்றியை காங்கிரஸால் ஜீரணிக்க முடிய வில்லை. இதற்காக, ஊடகங்கள் மீதும் புகார் தரச் சென்றவர்கள், இது ஒன்றும் நெருக்கடி நிலை காலம் அல்ல என்பதை மறந்துவிட்டனர். ஊர்வலப் பாதையில் இருந்த மதன்மோகன் மாளவியாவின் சிலைக்கு மோடி மாலை அணிவித் ததை விமர்சிக்கிறார்கள்.

மாளவியா, சிறந்த காங் கிரஸ் தலைவராக இருந்த தேசபக்தர். அவருக்கு மாலை அணிவிக்கப்பட்டது மதரீதீயானது அல்ல. தவிர, தேசபக்தியை காட்டுவதாகும். சிறுபான்மையினர் இடையே நம்பிக்கையை புதுப்பிக்க வேண்டி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீட்டில் 4.5 சதவீதம் ஒதுக்குவதாகக் கூறியுள்ளது.

தோல்வியுற இருக்கும் காங் கிரஸ் வெளியிட்டுள்ள இந்த துணை தேர்தல் அறிக்கையை யாரும் நம்பமாட்டார்கள். இந்த தோல்வியாளர்களின் தேர்தல் அறிக்கையை முன்பும் யாரும் பேசாதது போல், இப்போதும் யாரும் பேச மாட்டார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x