தமிழ்நாடு வேளாண் பல்கலை. மாணவர் சேர்க்கை தரவரிசை வெளியீடு

காட்டுமன்னார்கோவில் மாணவி, ஈரோடு மாணவர் முதலிடம்
வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை தஞ்சையில் அமைச்சர் வினோத் வெளியிட்டார். உடன்  வேளாண்மை உற்​பத்தி ஆணை​யரும், வேளாண்மை மற்​றும் உழவர் நலத்​துறை செய​லா​ள​ரு​மான பொ.சங்​கர் உள்ளிட்டோர்.

வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை தஞ்சையில் அமைச்சர் வினோத் வெளியிட்டார். உடன் வேளாண்மை உற்​பத்தி ஆணை​யரும், வேளாண்மை மற்​றும் உழவர் நலத்​துறை செய​லா​ள​ரு​மான பொ.சங்​கர் உள்ளிட்டோர்.

Updated on
1 min read

தஞ்சாவூர்: தமிழ்​நாடு வேளாண்​மைப் பல்​கலைக்​கழகத்​தின் இளநிலை மாணவர் சேர்க்​கைக்​கான தரவரிசைப் பட்​டியல் வெளி​யிடும் நிகழ்ச்​சி, தஞ்​சாவூர் மாவட்​டம் ஈச்​சங்​கோட்​டை​யில் உள்ள டாக்​டர் எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் வேளாண்​மைக் கல்​லூரி மற்​றும் ஆராய்ச்சி நிலை​யத்​தில் நேற்று நடை​பெற்​றது.

வேளாண்மை மற்​றும் உழவர் நலத் துறை அமைச்​சர் ர.வினோத் தலைமை வகித் தார். வேளாண்மை உற்​பத்தி ஆணை​யரும், வேளாண்மை மற்​றும் உழவர் நலத்​துறை செய​லா​ள​ரு​மான பொ.சங்​கர், மாவட்ட ஆட்​சி​யர் ஆர்​.ரேவ​தி, எம்​எல்ஏ விஜய் சரவணன், வேளாண்​மைப் பல்​கலைக்​கழக துணைவேந்தர் (பொ) கே.சுப்​பிரமணி​யன், இளநிலை (வேளாண்​மை) முதன்​மையர் சி.​பாபு பங்​கேற்​றனர்.

தொடர்ந்​து, மாணவர் சேர்க்கை-2026 தரவரிசைப் பட்​டியலை அமைச்​சர் ர.வினோத் வெளி​யிட்டு பேசி​ய​தாவது: இந்த கல்​வி​யாண்​டில் இளம் அறி​வியல் மாணவர்​கள் சேர்க்​கைக்​காக இணைய வழி மூலம் 14 பாடப்​பிரிவு​களுக்கு மே 6 முதல் ஜூன் 17 வரை வரை விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்​டன. மொத்​தம் பெறப்​பட்ட 26,709 விண்​ணப்​பங்​களில் 24,435 விண்​ணப்​பங்​கள் தகு​தி​யானவை​களாக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டன. இதில், 15,757 பேர் பெண்​கள்.

இவற்​றில் அரசுக் கல்​லூரி​களில் 2,856 இடங்​களும், தனி​யார் இணைப்புக் கல்​லூரி​களில் அரசு இடஒதுக்​கீ​டான 3,051 இடங்​களும் இணைய வழி கலந்​தாய்வு மூலம் நிரப்​பப்பட உள்​ளன. பொது இடஒதுக்​கீட்​டுக்​கான தரவரிசை பட்​டியலில் 22,987 விண்​ணப்​ப​தா​ரர்​களும், தொழில்​முறை கல்வி இடஒதுக்​கீட்​டில் 1,193 விண்​ணப்​ப​தா​ரர்​களும் இடம் பெற்று உள்​ளனர். இதர மாநிலத்தை சேர்ந்தவர்கள் 255 பேர்.

இந்த ஆண்டு இளம் அறி​வியல் வேளாண்மை மற்​றும் தோட்​டக்​கலை ஆகிய 2 பட்​டப்​படிப்​பு​கள் தமிழ் வழி​யில் பயிற்​று​விக்​கப்​படு​கின்​றன. அரசு பள்ளி மாணவர்​களுக்​கான 7.5 சதவீத இடஒதுக்​கீட்​டில், 418 இடங்​களுக்கு 8,746 பேரும், வேளாண் தொழில்​கல்வி பயின்ற மாணவர்​களுக்​கான 5 சதவீத இடஒதுக்​கீட்​டில் 239 இடங்​களுக்கு 1,193 பேரும், சிறந்த விளை​யாட்டு வீரர்​களுக்​கான இடஒதுக்​கீட்​டில் 20 இடங்​களுக்கு 190 பேரும், முன்​னாள் ராணுவ வீரர்​களுக்​கான இடஒதுக்​கீட்​டில் 20 இடங்​களுக்கு 170 பேரும், மாற்​றுத்​திற​னாளி​களுக்​கான 5 சதவீத இட ஒதுக்​கீட்​டில் 126 இடங்​களுக்கு 27 பேரும் விண்​ணப்​பித்​துள்​ளனர்.

சேர்க்​கைக்​கான இணைய வழி கலந்​தாய்வு தேதி உள்​ளிட்ட விவரங்​கள் https://tnau.ucanapply.com என்ற சேர்க்​கைக்​கான இணைய தளத்​தில் வெளி​யிடப்​படும் என்​றார். இந்த தர வரிசைப் பட்டியலில், காட்​டுமன்​னார்​கோ​வில் மாணவி மெர்​லின் மற்​றும் ஈரோடு மாணவர் மாதவ​ராஜ் ஆகியோர் 200-க்கு 200 கட் ஆஃப் பெற்று தரவரிசை​யில் முதலிடம் பிடித்தனர். இவ்வாறு கூறினார்.

<div class="paragraphs"><p>வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை தஞ்சையில் அமைச்சர் வினோத் வெளியிட்டார். உடன்  வேளாண்மை உற்​பத்தி ஆணை​யரும், வேளாண்மை மற்​றும் உழவர் நலத்​துறை செய​லா​ள​ரு​மான பொ.சங்​கர் உள்ளிட்டோர்.</p></div>
கோரப்படாத இபிஎஃப் கணக்குகளில் முடங்கிக் கிடக்கும் ரூ.9,330 கோடி: ஆர்டிஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in