10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் ‘சென்டம்’ பெறும் மாணவர்களின் விடைத்தாள்கள் முழுமையாக ஆய்வு

10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் ‘சென்டம்’ பெறும் மாணவர்களின் விடைத்தாள்கள் முழுமையாக ஆய்வு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்​வு​களில் முழு மதிப்​பெண் (சென்​டம்) பெறும் மாணவர்​களின் விடைத்​தாள்​களை முகாம் அலு​வலர்​கள் முழு​மை​யாக ஆய்வு செய்து கையொப்​பமிட வேண்​டும் என்று தேர்​வுத் துறை உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழக பள்​ளிக்​கல்வி பாடத் திட்​டத்​தில் 10, 12-ம் வகுப்​புக்​கான பொதுத் தேர்​வு​கள் கடந்த மார்ச் 2 முதல் 6-ம் தேதி வரை நடத்​தப்​பட்​டன. இத்​தேர்வை சுமார் 17 லட்​சம் மாணவ, மாணவி​கள் எழு​தி​யுள்​ளனர்.

விடைத்​தாள் திருத்​தும் பணி: இதில் பிளஸ்-2 விடைத்​தாள் திருத்​தும் பணி கடந்த 6-ம் தேதி தொடங்கி நடந்து வரு​கிறது. தொடர்ந்​து, 10-ம் வகுப்​புக்​கான விடைத்​தாள் திருத்​தும் பணி இன்று (ஏப்​.10) தொடங்​கு​கிறது.

இப்​பணி​யில் ஈடு​படும் முது​நிலை, பட்​ட​தாரி ஆசிரியர்​களுக்கு தேர்​வுத் துறை விரி​வான வழி​காட்​டு​தல்​களை வழங்​கி​யுள்​ளது. இந்​நிலை​யில், விடைத்​தாள் மதிப்​பீட்​டின்​போது நூற்​றுக்கு நூறு (சென்​டம்) மதிப்​பெண் பெறும் மாணவர்​களின் விடைத்​தாள்​களை முகாம் அலு​வலர் ஆய்வு செய்து கையொப்​பமிட வேண்​டும் என்று தேர்​வுத் துறை உத்​தர​விட்​டுள்​ளது.

வழி​காட்டு நெறி​முறை​கள்: இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் தேர்​வுத் துறை இயக்​குநரகம் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்:

பொதுத் தேர்​வு​களின் விடைத்​தாள் மதிப்​பீட்​டுப் பணி தொடர்​பாக அனைத்து முகாம் அலு​வலர்​களுக்​கும் ஏற்​கெனவே நிலை​யான வழி​காட்டு நெறி​முறை​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. அதை பின்​பற்றி மதிப்​பீட்டு பணி​களை மேற்​கொள்​ளு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டிருந்​தது.

அதைத் தொடர்ந்​து, மதிப்​பீட்​டுப் பணி​யின்​போது முழு மதிப்​பெண் (‘சென்​டம்’) பெறும் மாணவர்​களின் விடைத்​தாள்​களை கவன​மாக ஆய்வு செய்து கையொப்​பமிட வேண்​டும் என்று சமீபத்​திய மண்​டலக் கூட்​டத்​தில் முடி​வானது. எனவே, அனைத்து முகாம் அலு​வலர்​களும் தங்​கள் மையத்​தில் முழு மதிப்​பெண் பெறும் தேர்​வர்​களின் பட்​டியலை பதி​விறக்​கம் செய்​து, அவற்றை முழு​மை​யாக ஆராய்ந்து ஒப்​புதல் வழங்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் ‘சென்டம்’ பெறும் மாணவர்களின் விடைத்தாள்கள் முழுமையாக ஆய்வு
தமிழகத்தில் தேர்தல் நாளான ஏப்.23-ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in