மாணவர்களின் முறையற்ற சிகை அலங்காரத்தை சொந்த செலவில் சரிசெய்த உடற்கல்வி ஆசிரியர்!

முன்மாதிரியாக திகழ்ந்தவருக்கு குவியும் பாராட்டு
நாட்றம்பள்ளி  அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பழனி சொந்த செலவில் மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்தார்.

நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பழனி சொந்த செலவில் மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்தார்.

Updated on
2 min read

நாட்றம்பள்ளி: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம் பள்ளியில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப் பட்டன. சுமார் ஒன்றரை மாதங் களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்களில் பலர் தங்களது சிகை அலங்காரத்தை அவரவர் விருப்பத்துக்கு ஏற்றபடி வெட்டிக்கொண்டும், ஒரு சிலர் பங்க் கட்டிங், ஸ்டெப் கட்டிங், தலையின் ஓரத்தில் கோடு எடுத்தும், தலையின் பின்பகுதியில் முழுமையாக முடியை வெட்டியும், மேல் பகுதியில் கொத்தாக முடி வைத்தபடி பள்ளிக்கு வந்ததை பார்த்த ஆசிரியர்கள் திகைத்தனர்.

இதைத்தொடர்ந்து, சிகை அலங்காரம் சரியில்லாத மாணவர்களை அழைத்து மறுநாள் பள்ளிக்கு வரும்போது உங்களது முடியை முறையாக வெட்டியும், சரி செய்து கொண்டு தான் பள்ளிக்கு வர வேண்டும் என ஆசிரியர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால், அதை ஏற்காத மாண வர்கள் சிலர் தங்கள் சிகை அலங்காரத்தை ஒழுங்குப் படுத்தாமல் தொடர்ச்சியாக அப்படியே பள்ளிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டு ஆவேசமடைந்த அதே பள்ளியின் உடற்கல்வி ஆசிரி யரான பழனி என்பவர் சிகை அலங்காரம் ஒழுங்கில்லாத 50-க்கும் மேற்பட்ட மாண வர்களை தனியாக நிற்க வைத்தார்.

அடுத்த சில விநாடிகளில் தனது கைபேசி மூலம் அதே பகுதியைச் சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளர்கள் 2 பேரை பள்ளிக்கு வரவழைத்து, சிகை அலங்காரம் ஒழுங்கில்லாத மாணவர்களின் தலைமுடியை ஒழுங்குப்படுத்துமாறு கூறினார்.

இதைக்கேட்டதும் அதிர்ச்சிக் குள்ளான மாணவர்கள் "சார், சார் வேண்டாம் சார்’’ நாளைக்கு சரி செய்துக்கொண்டு வரு கிறோம்" என கெஞ்சினர். இதை ஏற்காத உடற்கல்வி ஆசிரியர் இதுபோன்ற தலை முடியை உங்களது பெற்றோர் எப்படி அனுமதிக்கின்றனர் என தெரியவில்லை என ஆவேசப்பட்ட ஆசிரியர் பழனி அனைத்து மாணவர்களுக்கும் தனது சொந்த செலவில் அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் சிகை அலங்காரத்தை ஒழுங்கப் படுத்தி னார்.

உடற்கல்வி ஆசிரியர் பழனியின் இந்த செயல் பிற ஆசிரியர்கள் மட்டுமின்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுதொடர்பாக உடற்கல்வி ஆசிரியர் பழனியிடம் கேட்ட போது, ‘‘ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் கல்வியை காட்டிலும், ஒழுக்கம் மிக முக்கியமானது.

கல்வியில் சிறந்து விளங்கினாலும், ஒழுக்கம் இல்லாவிட்டால் அந்த கல்வி பயன் தராது. பள்ளி மாணவர் களுக்கு கல்வியுடன் ஒழுக் கத்தை கற்றுத்தர வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களது சிகை அலங்காரத்தை ஒழுங்குப்படுத்தினேன்.

இதை சிலர் தவறாக கருதலாம். ஆனால், மாணவர்கள் நல்ல முறையில் வளர வேண்டும். எதிர்காலத்தில் அவர்கள் சிறந்த மனிதர்களாக திகழ வேண்டும் என்பதற்காகவே இதை நான் செய்தேன்.

இனி தங்கள் இஷ்டம்போல எந்த மாணவரும் சிகை அலங்காரத்தை வடிவமைக்க விரும்பாத வகையில் தக்க அறிவுரையும் வழங்கியுள்ளேன்’’ என்றார். மாணவர்கள் கல்வியில் மட்டுமல்ல ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக திகழ ஆசிரியர்கள் மட்டுமே போதாது பெற்றோரும், இந்த சமுதாயமும் முயற்சி எடுக்க வேண்டும் என்பதே நிதர்சன மான உண்மை.

<div class="paragraphs"><p>நாட்றம்பள்ளி  அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பழனி சொந்த செலவில் மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்தார்.</p></div>
இந்தியாவுடனான நட்பின் அடையாளமாக சத்ரபதி சிவாஜி மகராஜ் சிலை நிறுவ இஸ்ரேல் அரசு திட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in