இந்தியாவுடனான நட்பின் அடையாளமாக சத்ரபதி சிவாஜி மகராஜ் சிலை நிறுவ இஸ்ரேல் அரசு திட்டம்

இந்தியாவுடனான நட்பின் அடையாளமாக சத்ரபதி சிவாஜி மகராஜ் சிலை நிறுவ இஸ்ரேல் அரசு திட்டம்
Updated on
1 min read

மும்பை: இந்தியா - இஸ்ரேல் இடையி​லான நட்​பின் அடையாளமாக இஸ்​ரேலில் சத்​ரபதி சிவாஜி மகா​ராஜின் பிரம்​மாண்ட சிலையை நிறுவ அந்​நாட்டு அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

இதுகுறித்து மும்​பைக்​கான இஸ்​ரேல் துணைத் தூதர் யானிவ் ரெவாச் நேற்று கூறும்​போது, ‘‘சி​வாஜி மகராஜ் இந்​தி​யா​வுக்கு எவ்​வளவு முக்​கிய​மானவர் என்​பதை நாங்​கள் அறிவோம். எனவே, இஸ்​ரேலின் பெரிய நகரங்​களில் ஒன்​றில் சிவாஜி மகராஜ் சிலை நிறு​வப்​படும், இந்​தத் திட்​டம் இரு நாட்டு மக்​களை​யும் நீண்​ட​கால நோக்​கில் ஒன்​றிணைக்​கும்.

சிவாஜி​யின் வரலாற்​றுப் பெரு​மைக்​குத் தகுந்​த​வாறு வடிவ​மைப்பு மற்​றும் வரலாற்​றுச் சான்​றுகளைப் பெற மகா​ராஷ்டிர முதல்​வர் தேவேந்​திர ஃபட்​னா​விஸின் ஒத்​துழைப்​பைக் கோரி​யுள்​ளோம். அவரும் அதற்கு சம்​மதம் தெரி​வித்​துள்​ளார்.

மகா​ராஷ்டி​ரா​வுக்​கும், இன்று இஸ்​ரேலிய சமூகத்​துக்​குப் பெரும் பங்​களிப்பை வழங்கி வரும் இந்​திய - யூத சமூகத்​துக்​கும் இடையே உள்ள வரலாற்​றுத் தொடர்​பு​களின் அடை​யாள​மாக இச்​சிலை விளங்​கும். இஸ்​ரேல் மக்​களிடையே சிவாஜி மகராஜின் சாதனை​கள் குறித்த விழிப்​புணர்வை ஏற்​படுத்​தவே இந்த நட்​புறவு முயற்சி மேற்​கொள்​ளப்​படு​கிறது’’ என்​றார்.

இந்த வரலாற்​றுச் சிறப்​புமிக்க அறி​விப்​புக்கு நன்றி தெரி​வித்​துள்ள மகா​ராஷ்டிர முதல்​வர் தேவேந்​திர ஃபட்​னா​விஸ், இத்​திட்​டத்​துக்கு மாநில அரசு தனது முழு ஆதர​வை​யும் வழங்​கும் என்று எக்​ஸ் தளத்​தில்​ பதி​விட்​டுள்​ளார்​.

இந்தியாவுடனான நட்பின் அடையாளமாக சத்ரபதி சிவாஜி மகராஜ் சிலை நிறுவ இஸ்ரேல் அரசு திட்டம்
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தொடர்ந்து முயற்சி: என்டிஏ அரசின் 12 ஆண்டுகள் நிறைவையொட்டி பிரதமர் மோடி பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in