நீட்: கனவு தூரமில்லை... சரியான வழியில் ஒரு நாளைக்கு ஒரு படி வைத்தால் போதும்!

நீட்: கனவு தூரமில்லை... சரியான வழியில் ஒரு நாளைக்கு ஒரு படி வைத்தால் போதும்!
Updated on
2 min read

“நான் NEET-ஐ crack செய்ய முடியுமா?” என்ற கேள்வி இன்று பல மாணவர்களின் மனதில் இருக்கிறது. சிலருக்கு syllabus மிகப் பெரிதாகத் தோன்றுகிறது. சிலருக்கு Physics பயமாக இருக்கிறது. சிலருக்கு Chemistry நினைவில் நிற்பதில்லை. சிலருக்கு Biology படித்தும் முழு marks எடுக்க முடியவில்லை. இன்னும் சிலருக்கு Mock Test-இல் குறைந்த marks வருவதால் confidence குறைகிறது.

ஆனால், ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: NEET-இல் வெற்றி பெறுபவர்கள் அனைவரும் ஆரம்பத்திலிருந்தே toppers ஆக இருந்தவர்கள் அல்ல. ஆனால், அவர்கள் சரியான முறையில் தொடர்ந்து முன்னேறியவர்கள்.

NEET போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றிக்கு முக்கியமானது. எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பதல்ல; எப்படிப் படிக்கிறோம்; எவ்வளவு நேரம் தொடர்ந்து படிக்கிறோம் என்பதுதான்.

PHYSICS

Formula-வை மனப்பாடம் செய்வது மட்டும் போதாது!

Physics-இல் ஒரு Formula-வை பார்த்தவுடன் அதை பயன்படுத்துவதற்கு பதிலாக முதலில் அதன் பின்னால் இருக்கும் Concept-ஐ புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு chapter-க்கும் ஒரு Formula, Concept Notebook வைத்துக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு Formula-க்கும்:

அது எந்த concept-ஐ அடிப்படையாகக் கொண்டது?

எந்த சூழ்நிலையில் பயன்படுத்த வேண்டும்?

Units, dimensions ?

எந்த மாதிரியான questionsஇல் பயன் படுத்தலாம்?

மாணவர்கள் பொதுவாகச் செய்யும் mistakes என்ன? என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். Theory-யை புரிந்துகொள்வதும், அதை questions மூலம் apply செய்வதும் Physicsஇல் சமமாக முக்கியம்.

ஒரு question தவறாக வந்தால், answer-ஐ மட்டும் பார்த்துவிட்டு அடுத்த question-க்கு செல்லாதீர்கள். அதற்குப் பதிலாக:

“நான் எங்கு தவறு செய்தேன்?” என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

அந்த mistake-ஐ note செய்து, மீண்டும் அந்த concept-ஐ revise செய்வதே உண்மையான learning.

Physicsஇல் நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறும், அடுத்த சரியான answer-க்கு ஒரு படி அருகில் அழைத்துச் செல்லும்.

CHEMISTRY

ஒரே Subject; ஆனால் மூன்று விதமான அணுகுமுறை!

Chemistry-யை ஒரே மாதிரியாகப் படிக்கக் கூடாது.

Physical Chemistry

Concept-ஐ புரிந்துகொண்டு தொடர்ந்து calculations practice செய்ய வேண்டும். Formula தெரிந்தால் மட்டும் போதாது; எந்தச் சூழ்நிலையில் எந்த formulaவைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

Organic Chemistry

ஒவ்வொரு reaction-ஐயும் தனித்தனியாக மனப்பாடம் செய்வதைவிட, reaction mechanism, conversion pattern-ஐ புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

Inorganic Chemistry

இங்கு NCERT-ஐ கவனமாகப் படிப்பது மிகவும் முக்கியம். Trends, exceptions, properties, colours, important statements ஆகியவற்றை short notes மூலம் தொடர்ந்து revise செய்யுங்கள்.

Chemistryஇல் வெற்றி பெறுவதற்கான முக்கிய ரகசியம்:

ஒருமுறை படிப்பது அல்ல; சரியான இடைவெளியில் மீண்டும் மீண்டும் revision செய்வது.

BIOLOGY

அதிக மதிப்பெண் தரும் பாடம்; அதிகக் கவனம் தேவைப்படும் பாடம்!

பல மாணவர்கள் Biology எளிதான பாடம் என நினைத்து கடைசி நேரத்துக்கு விட்டுவிடுகிறார்கள். இது மிகப் பெரிய தவறு.

Biology-யில் நல்ல score பெறுவதற்கு அதிக புத்தகங்களைப் படிப்பது அவசியமில்லை. NCERT concepts, முக்கிய தகவல்களைத் தெளிவாகப் புரிந்துகொண்டு repeated revision செய்வதே முக்கியம்.

ஒரு chapter படிக்கும்போது:

1. முதலில் முழு concept-ஐ புரிந்து கொள்ளுங்கள்.

2. முக்கிய keywords, statements-கவனியுங்கள்.

3. Diagrams, labels-ஐ தவிர்க்காதீர்கள்.

4. Exceptions, confusing points-ஐ தனியாக note செய்யுங்கள்.

5. உடனடியாக MCQs மூலம் உங்கள் understanding-ஐ test செய்யுங்கள்.

6. தவறான questions-ஐ மீண்டும் revise செய்யுங்கள்.

ஒரே, சரியான content-ஐ பலமுறை revise செய்யும் மாணவர்களுக்கு Biology ஒரு scoring subject ஆக மாறும்.

ஒரே நாளில் Topper ஆக வேண்டியதில்லை. ஆனால், ஒவ்வொரு நாளும் நேற்றைவிட ஒரு படி முன்னேறுவதை மனதில் கொள்ள வேண்டும்.

NEET என்பது Sprint அல்ல, ஒரு Marathon!

சில மாணவர்கள் ஆரம்பத்தில் மிகுந்த வேகத்துடன் படிப்பார்கள். ஆனால், சில நாள்களில் சோர்வடைந்து விடுவார்கள். வேறு சில மாணவர்கள் தினமும் சிறிது நேரம்தான் படிப்பார்கள். ஆனால், தொடர்ந்து படிப்பார்கள். தொடர்ந்து practice செய்வார்கள். தொடர்ந்து revision செய்வார்கள்.

நீண்ட காலத்தில் யார் வெற்றி பெறுவார்? Consistency-யை கைவிடாத மாணவர்தான்.

ஒரு நாளைக்கு நீங்கள் படிக்கும் நேரத்தைவிட, நீங்கள் எத்தனை நாள்கள் உங்கள் preparation-ஐ கைவிடாமல் தொடர்ந்து செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

உங்கள் தற்போதைய நிலை உங்கள் இறுதி முடிவு அல்ல! உங்களுக்கு இன்று confidence இல்லாமல் இருக்கலாம். ஒரு chapter புரியாமல் இருக்கலாம்.

Mock Testஇல் குறைந்த marks வந்திருக்கலாம். மற்ற மாணவர்கள் உங்களைவிட முன்னேறி இருப்பதாகத் தோன்றலாம்.

ஆனால், இவை எதுவும் final result அல்ல. குறைந்த mark உங்கள் திறமையைத் தீர்மானிக்காது. ஒரு தவறு உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்யாது. இன்று இருக்கும் உங்கள் நிலை, நாளை நீங்கள் எங்கு செல்லப்போகிறீர்கள் என்பதை நிர்ணயிக்காது.

சரியான strategy, தொடர்ந்து practice, repeated revision இருந்தால், இன்று average student-ஆக இருக்கும் ஒருவரும், நாளை ஒரு strong competitor-ஆக மாற முடியும். படிக்கத் தொடங்குங்கள்.

தவறு செய்யுங்கள். உங்கள் தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். மீண்டும் முயற்சி செய்யுங்கள். ஆனால், ஒருபோதும் அதனை நிறுத்தாதீர்கள். நீங்கள் இன்று எங்கிருந்து தொடங்குகிறீர்கள் என்பது முக்கியமல்ல.

உங்கள் கனவை நோக்கி இன்று நீங்கள் எடுத்துவைக்கும் அடுத்த படிதான் முக்கியம். NEET கனவு தூரமில்லை. சரியான முறையில், தொடர்ந்து, ஒரு நாளைக்கு ஒரு படி என முன்னேறுங்கள் ஒரு நாள் அந்த வெற்றி உங்களைத் தேடி வரும்!

- R.அஸ்வின் | கல்வியாளர் | careerguidanceashwin@gmail.com

நீட்: கனவு தூரமில்லை... சரியான வழியில் ஒரு நாளைக்கு ஒரு படி வைத்தால் போதும்!
கால்நடைகளைக் குணப்படுத்த சித்த மருத்துவம் சிறந்தது! - பேராசிரியர் புண்ணியமூர்த்தி நடேசன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in